Skip to main content

சன் பார்மா விரிவாக்கத்திற்கு இடைக்கால தடை!

Published on 23/05/2022 | Edited on 23/05/2022

 

vetathangal

 

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உள்ள இடத்திற்கு அருகே உள்ள மருந்து தயாரிக்கும் நிறுவனமான சன் பார்மா நிறுவனத்தின் விரிவாக்கத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

சரணாலயம் உள்ள பகுதியில் கட்டமைப்புகளையும் மேற்கொள்ள தேசிய வன உயிர் வாரியத்தின் அனுமதி அவசியம் என விதி உள்ளது. இந்த நிலையில் சன் பார்மா மருந்து நிறுவனம் இந்த விதிகளை பின்பற்றவில்லை என வழக்கு தொடரப்பட்டிருந்தது. 1998 ஆம் ஆண்டு சரணாலயத்தை சுற்றியுள்ள ஐந்து கிலோ மீட்டர் பரப்பளவும் சரணாலயமாக கருதப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் சன் பார்மா விரிவாக்கத்திற்கு கொடுக்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்யக்கோரி தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் இந்த இடைக்காலத் தடையை விதித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

குடிநீரில் கலந்த கழிவுநீர்; 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்ப்பு

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
sewage mixed with drinking water; More than 50 people were hospitalized

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே குடிநீர் குழாய் உடைந்து கழிவுநீர் கலந்த நிலையில் கழிவுநீர் கலந்த நீரை குடித்த 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் என உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த முத்தம்பட்டி, ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்துள்ளதாக தெரிகிறது. இதில் 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடிநீர் குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பு காரணமாக அதில் கழிவுநீர் கலந்ததும் அந்த நீரை பயன்படுத்தியதால் பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story

மதுரை எய்ம்ஸ்; சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம்! 

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
Madurai AIIMS; Application for Environmental Permit 

மதுரை மாவட்டம் தோப்பூரில்  எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தொடங்கப்பட்டது. இந்த மருத்துவமனைக்காகத் தலைவர், செயல் இயக்குநர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அதேபோல் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக சில குழுக்களும் அமைக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து எந்த ஒரு பணிகளும் நடைபெறாத நிலையில், பல்வேறு தரப்பினரும், அரசியல் கட்சியினரும் விரைவில் கட்டுமான பணியைத் தொடங்க மத்திய அரசை வலியுறுத்தி வந்தனர்.

இதனிடையே 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தற்போதைய திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மத்திய அரசு தமிழகத்திற்கு வெறும் ஒத்த செங்கல்லை மட்டும் நட்டு வைத்துவிட்டு எய்ம்ஸ் மருத்துவமனையின் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது என்று கூறியது. ஆனால் அங்கு சென்று பார்த்தால் இந்த ஒத்த செங்கல்தான் இருக்கிறது என்று ஒரு செங்கல்லை வைத்து பிரச்சாரம் செய்தார். இது அரசியல் களத்தில் பலரது கவனத்தையும் பெற்றது.

இந்நிலையில், மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி எய்ம்ஸ் நிர்வாகம் சார்பில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. 221 ஏக்கரில் உள் மற்றும் வெளி நோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, மருத்துவக் கல்லூரி, செவிலியர்கள் கல்லூரி, பணியாளர்கள் குடியிருப்பு, மாணவ மாணவியருக்கான விடுதிகள் அமைக்கப்பட உள்ளது.