காவிரி ஒழுங்காற்று குழுவின் 53வது கூட்டம் டெல்லியில் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள் சார்பில் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். காவிரி தொடர்பாக விவாதித்த இந்த குழு இந்த மாதம் வரை தமிழகத்திற்குத் தர வேண்டிய நீரைத் தரக்கோரி கர்நாடகத்திற்கு உத்தரவிட்டது.
அதன்படி தமிழ்நாட்டுக்கு இந்த மாதம் காவிரியில் 40 டி.எம்.சி. தண்ணீரைத் திறந்து விட வேண்டும் என காவிரி ஒழுங்காற்றுக் குழுவினர் கர்நாடக அரசிற்கு அறிவுறுத்தியுள்ளனர்.மேலும், செப்டம்பர் வரை கொடுக்க வேண்டிய நிலுவை தண்ணீர் 26 டி.எம்.சி.யை சேர்த்து வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.