Skip to main content

குழந்தைகளை தேவதைகளாக்கிய இன்ஸ்பெக்டர்..!!!

Published on 31/10/2018 | Edited on 31/10/2018

மாட்டுத் தொழுவ முன்பகுதியில் வாழ்ந்து, வறுமையில் உழன்ற குழந்தைகளுக்கு புத்தாடை, ஸ்கூல் பேக், ஷூ உள்ளிட்டவைகளை வழங்கி குட்டித் தேவதைகளாக்கி, அவர்களுடனே தீபாவளி கொண்டாட வழி வகுத்துள்ளார் புளியங்குடி காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஆடிவேல்.

 

fairy

 

நெல்லை மாவட்டம் சிவகிரி சேணைத்தலைவர் மேல்நிலைப்பள்ளியின் எதிரில் இருக்கும் மாட்டுத் தொழுவத்தின் முன்பகுதியில் உள்ள மூன்று குழந்தைகள் மேல் தற்பொழுது வெளிச்சம் விழுந்துள்ளது. குழந்தைகள் சிறுவயதாக இருக்கும் போதே அவர்களின் தந்தைகள் தவிக்கவிட்டு செல்ல, கூலி வேலை செய்து செல்வம் இல்லாவிட்டால் என்ன..? கல்வி செல்வத்தையாவது கொடுபோம் என தன் மகள்கள் பிரவீனா, மகேஸ்வரி மற்றும் மாரிச்செல்வி ஆகிய மூன்று பெண் குழந்தைகளையும் வறுமையினூடே, கல்வி கொடுத்து வருகின்றார் மாரியம்மாள். 

 

fairy

 

இதில், மூத்த குழந்தை பிரவீனா தேவிப்பட்டிணம் ஸ்டெல்லா பள்ளியில் 9ம் வகுப்பு படிக்க, மற்றைய இரு குழந்தைகளும் உள்ளூர் பள்ளியில் 4ம் வகுப்பு பயின்று வருகின்றனர். என்னதான் கல்வி பயின்றாலும் குழந்தைகள் தானே..? தன்னுடைய தீபாவளி ஆசைகளை அவ்வப்போது வெளிப்படுத்த மாரியம்மாளுக்கு அதனை நிறைவேற்ற இயலாத நிலை. இத்தகவல் வள்ளலார் வழி அடிகளாருக்கு செல்ல, குழந்தைகள் குட்டி தேவதைகளாகியுள்ளனர்.

 

fairy

 

"அனைத்துக் குழந்தைகளுக்கும் எதிர்பார்ப்பான பண்டிகை என்றால் அது தீபாவளிப் பண்டிகைதான்.! குழந்தைகள் சிறு வயதாக இருக்கும் போதே அவர்களின் அப்பா அவங்களை விட்டு பிரிந்துவிட்டார். அவர்களது தாயின்  கூலி வேலையில்தான் அந்த குழந்தைகள் வாழ்கிறார்கள் ! எனும் தகவலை அந்த ஊர்க்காரங்க எங்கிட்ட கூற, நானும் குழந்தைகளின் நிலையை விளக்கி இன்ஸ்பெக்டர் ஆடிவேல் அவர்களிடம் கூறினேன் , அவர் தன்னுடைய சொந்த வாகனத்தை அந்த குழந்தைகளின் வசிப்பிடத்திற்கு அனுப்பி அவங்களை அழைச்சுக்கிட்டு புளியங்குடியிலுள்ள இரண்டு பெரிய ஜவுளிக்கடைக்குக் கூட்டிட்டு போய், என்ன வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளுங்கள் " எனக் கூற சிறிது நேரத்திலேயே புத்தாடைகளை தேர்வு செய்து, தனக்கு அணிவித்து அழகுப் பார்த்துக் கொண்டது அக்குழந்தைகள். 

 

fairy

 

அதுபோக, அவர்களுக்கு தேவையான ஸ்கூல் பேக், ஷூ, செப்பல் என அனைத்தையும் வாங்கிக் கொடுத்து, அவர்களுடனே தீபாவளி கொண்டாடுவதாக உறுதி கொடுத்து அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தார் இன்ஸ்பெக்டர் ஆடிவேல். அவருடைய மனிதநேயம் போற்றத்தக்கது" என்கிறார் வள்ளலார் அடிகளார் நாதகிரி வீரபத்திரன். நாமும் வாழ்த்துவோமாக.!!!

சார்ந்த செய்திகள்

Next Story

அலட்சியம் காட்டிய நகராட்சி; பரிதாபமாக பிரிந்த பெண் இன்ஸ்பெக்டரின் உயிர்!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
Woman inspector passed away due to unidentified speed breaker.

புதுக்கோட்டை மாவட்டத்தில் சாலைப்பணிகள் நடந்து முடியும் போது பல இடங்களில் தேவையில்லாமல் வேகத்தடைகளும் அமைக்கப்பட்டு வருகிறது. 

புதுக்கோட்டை - அறந்தாங்கி 30 கி.மீ சாலையில் 40க்கும் மேற்பட்ட வேகத்தடைகள், புதுக்கோட்டை - ஆலங்குடி  சாலையில் ஒரு கி.மீ உள்ளே இருக்கும் கல்லூரிகளுக்கு பிரதானச் சாலையில் பெரிய பெரிய வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது. எந்த வேகத்தடையிலும் வெள்ளைக்கோடு அடையாளம் இருப்பதில்லை. இதே போல புதுக்கோட்டை நகராட்சி பகுதிக்குள் அமைக்கப்படும் சாலைகளில் திடீர் திடீரென பல இடங்ளிலும் பெரிய பெரிய திண்ணைகள் போல வேகத்தடைகள் அமைத்துள்ளனர். 

இந்தப் புதிய வேகத்தடைகள் அமைக்கப்பட்டாலும் அதற்கான அடையாளம் ஏதும் இல்லை. இதே போல பேருந்து நிலையம் செல்லும் பிரதான சாலையில் பழைய அரசு மருத்துவமனை பிரிவு சாலையில் 4 சாலைகள் இணையும் இடத்தில் உள்ள சிக்னல்கள் பல வருடமாக வேலை செய்யவில்லை. மேலும் அதே இடத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நகராட்சி நிர்வாகத்தில் இருந்து வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது.  ஆனால்  வேகத்தடை அமைத்த இடத்தில் வெள்ளைக்கோடுகள் அடையாளமிடவில்லை. இதனால் அந்த வழியாகச் சென்ற பலரும் தவறி கீழே விழுந்து சென்றுள்ளனர். அதன் பிறகும் அதனை கவனிக்காத நகராட்சி நிர்வாகம் அலட்சியமாக இருந்துள்ளது.

Woman inspector passed away due to unidentified speed breaker

இந்த நிலையில் தான் திருச்சி திருவரம்பூர் 2 காவல் நிலைய ஆய்வாளர் பிரியா 7 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை பணி முடிந்து இரவில் தனது குழந்தைகளைப் பார்க்க புதுக்கோட்டையில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளார். பேருந்து நிலையம் வந்த அவரது கணவர் ஆய்வாளர் பிரியாவை தனது புல்லட்டில் ஏற்றிக் கொண்டு செல்லும் போது அடையாளமில்லாத பெரிய வேகத்தடையில் பைக் ஏறி குதித்ததில் தடுமாறி கீழே விழுந்த ஆய்வாளர் பிரியாவின் பின்பக்க தலையில் பலத்த காயமடைந்தார். 

உடனே அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, திருச்சியில் உள்ள ஒரு பெரிய தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

பிரதானச் சாலையில் திடீர் வேகத்தடை அமைத்த நகராட்சி நிர்வாகம் அடையாளக் கோடுகள் போடாமல் அலட்சியமாக இருந்ததால் அந்த வேகத்தடையே காவல் ஆய்வாளரின் உயிரைக் குடிக்கும் எமனாக இருந்துவிட்டது. இதே போல நகரில் ஏராளமான ஆபத்தான வேகத்தடைகள் உள்ளது.

ஒரு பெண் ஆய்வாளர் வேகத்தடையில் விழுந்த பிறகு யாரோ கோலப் பொடி வாங்கிச் சென்று தூவியுள்ளனர். அதன் பிறகு நேற்று இரவு நகராட்சி சார்பில் வெள்ளைக் கோடு போட்டுள்ளனர். ஒவ்வொரு பணியின் போதும் காட்டப்படும் சிறியஅலட்சியங்கள் தான் இப்படி உயிர்ப்பலிகள் வரை கொண்டு செல்கிறது என்பது தான் வேதனை. இப்படி அலட்சியமாக இருந்து உயிர்பலியாக காரணமாக இருந்த நகராட்சி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் பெண் காவல் ஆய்வாளரின் நண்பர்களும், உறவினர்களும்.

Next Story

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு; இன்ஸ்பெக்டர் ஜாமீன் மனு தள்ளுபடி

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
Satankulam father, son case; Inspector dismisses bail plea

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் நேரம் கடந்து கடையைத் திறந்து வைத்ததாக விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல் நிலையத்தில், காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கினை சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமைக் காவலர்கள் முருகன், சாமிதுரை, காவலர்கள் முத்துராஜா, செல்லத்துரை மற்றும் தாமஸ் பிரான்சிஸ் உள்ளிட்ட 9 பேரை சிபிஐ போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட முதன்மை அமர்வு முதலாவது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை, மகன் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமின் கோரி 5 வது முறையாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பு வழக்கறிஞர், “சாட்சிகளில் ஒருவரான மாஜிஸ்திரேட் பாரதிதாசனிடம் 28 நாட்கள் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டுள்ளதால், வழக்கின் விசாரணை தாமதமாகிறது” என வாதிட்டார். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “மாஜிஸ்திரேட் பாரதிதாசனிடம் 28 நாட்கள் குறுக்கு விசாரணை நடத்தினால், அவர் தன்னுடைய பணிகளை செய்வாரா அல்லது தினசரி நீதிமன்றம் வந்து சாட்சியம் அளிப்பாரா?” என சரமாரியாக கேள்வி எழுப்பினார். இதனையடுத்து காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமின் மனுவை 5 வது முறையாக தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமீன் மனு 4 முறை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.