Skip to main content

ஒட்டன்சத்திரத்தில் இந்திய அளவிலான கபடி போட்டி - அமைச்சர் சக்கரபாணி பேட்டி

Published on 26/11/2022 | Edited on 26/11/2022

 

 India level kabaddi tournament in Ottanchatra-Interview with Minister Chakrapani

 

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஒட்டன்சத்திரத்தில் அகில இந்திய அளவிலான கபடி போட்டி நடத்தப்பட உள்ளதாக உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

 

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே இருக்கும் கணக்கம்பட்டியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் வருவாய் கோட்டாட்சியர் சிவக்குமார் வரவேற்றார். எம்.பி.வேலுச்சாமி முன்னிலை வகித்தார். விழாவில் 2,028 பயனாளிகளுக்கு 5.82 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார்.

 

அதன் பின் பத்திரிகையாளர்களிடம் அமைச்சர் சக்கரபாணி பேசும்போது,  ''திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஒட்டன்சத்திரத்தில் வரும் ஜனவரி 12 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு அகில இந்திய அளவிலான ஏ கிரேடு கபடி போட்டி நடக்க உள்ளது. இப்போட்டியில் ப்ரோ கபடி மற்றும் தேசிய அளவிலான கபடி போட்டிகளில் பங்கேற்ற வீரர்கள் பங்கேற்க உள்ளனர். ஆண் பெண் என இரு பிரிவாக போட்டி நடத்தப்பட உள்ளது. ஆண்கள் பிரிவில் முதல் நான்கு  இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு முறையே தலா 20 லட்சம், 15 லட்சம், 7.5 லட்சம், 7.5 லட்சம் என பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

 

அதுபோல்  பெண்கள் அணிகளுக்கு முறையே 15 லட்சம், 10 லட்சம் மற்றும் 5 லட்சம், 5 லட்சம் என வழங்கப்பட உள்ளது. மேலும் ஆண்கள் பிரிவில் சிறந்த மூன்று வீரர்களுக்கும், பெண்கள் பிரிவில் சிறந்த மூன்று வீராங்கனைகளுக்கும் கார்கள் பரிசாக வழங்கப்பட உள்ளன.  போட்டியில் இறுதிவரை வந்து வெற்றி வாய்ப்பை இழக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் தலா நான்கு அணிகளுக்கும் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.'' என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மக்களின் குடிநீர் பிரச்சனை ரூ.1000 கோடியில் பணிகள் நடந்து வருகிறது” - அமைச்சர் சக்கரபாணி

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
People's drinking water problem being worked on  Rs.1000 crore says  sakkarapani

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் நகராட்சிப் பகுதிகளில் ரூ.10.78 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிகளுக்கு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி அடிக்கல் நாட்டினார். இந்த விழாவுக்கு நகர மன்ற துணைத் தலைவர் வெள்ளைச்சாமி மற்றும் எம்பி வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த விழாவில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பேசும் போது, தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, அந்த திட்டங்களின் பயன்கள் கடைக் கோடி கிராமங்களில் வசிக்கும் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் செயல்படுத்தி வருகிறார்கள். அடுக்குமாடி கட்டடம் கட்டுவதற்காக ஒட்டன்சத்திரத்தில் 480 வீடும், கீரனூரில் 430 வீடும் கட்டுவதற்காக அனுமதி வழங்கியுள்ளார்கள். 

ஒட்டன்சத்திரம் பகுதியில் 3 கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. அம்பிளிக்கையில் பெண்கள் மட்டும் படிக்கும் கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் ஒட்டன்சத்திரத்தில் கல்லுாரி கட்டடம் கட்டுவதற்கு ரூ.25.00 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விருப்பாட்சியில் தொழிற்பயிற்சி நிலையம் ரூ.7.00 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. படித்து முடித்த பிறகு போட்டி தேர்வுக்கான பயிற்சி மையம் காளாஞ்சிபட்டியில் ரூ.10.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இந்த மையத்தினை  தமிழ்நாடு முதலமைச்சர் விரைவில் திறந்து வைக்க உள்ளார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்ற பின்பு பொருளாதாரத்தில் வாழ்வாதாரத்தினை இழந்த மக்களுக்கு முதல் கையெழுத்திட்டு வாழ்வாதாரத்தினை இழந்த மக்களுக்கு உதவிடும் வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4000 உதவித்தொகை வழங்கினார். 

People's drinking water problem being worked on  Rs.1000 crore says  sakkarapani

பெண்களுக்கு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணச்சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 440 கோடி பெண்கள் கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டத்தில் பயனடைந்துள்ளனர். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் 1.15 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர். ஒட்டன்சத்திரம் பகுதி மக்களுக்கு குடிநீர் பிரச்சனையை தீர்த்து வைப்பதற்கு ரூ.1000 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒரு நபருக்கு தினமும் 135 லிட்டர் குடிநீர் வழங்கத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 

ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகள் தரம் பிரித்து உரம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒட்டன்சத்திரத்தில் அரசு மருத்துவமனை அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனையாக ரூ.75.00 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. தலைக்கையன்கோட்டையில் இருந்து பழனி வரை நான்கு வழிச் சாலையில் மின்விளக்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெண்கள் உயர் கல்வி படிப்பதற்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு பள்ளியில் ஆண்கள் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்விக்கு சென்றால் அவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ்புதல்வன் திட்டத்திற்கு ரூ.350 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

அரசு பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் கொண்டு வரப்படவுள்ளது. ஏழை குடும்பங்களைச் சார்ந்த 5 இலட்சம் குடும்பங்களை கண்டறிந்து அவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்தால் தகுதியுள்ளவர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்களுக்கு தரமான அரிசி வழங்க பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தற்போது பொதுமக்களுக்கு தரமான அரிசி வழங்கப்பட்டு வருகிறது. 

ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட நாகணம்பட்டி பெரியாஞ்செட்டிபட்டியில் 5 பணிகள் ரூ.1.44 கோடி மதிப்பீட்டிலும், வார்டு 11 மற்றும் 12 ஆகிய பகுதிகளில் 6 பணிகள் ரூ.1.18 கோடி மதிப்பீட்டிலும்,10வது வார்டு பகுதியில் 4 பணிகள் ரூ.6.52 கோடி மதிப்பீட்டிலும், வார்டு 15, 16, 17 மற்றும் 18 ஆகிய பகுதிகளில் 8 பணிகள் ரூ.1.13 கோடி மதிப்பீட்டிலும், 14-வது வார்டு பகுதியில் 3 பணிகள் ரூ.42.20 இலட்சம் மதிப்பீட்டிலும், வார்டு 7, 9 மற்றும் 13 ஆகிய பகுதிகளில் 13 பணிகள் .2.35 கோடி மதிப்பீட்டிலும், வார்டு 1. 4, 5, 6 மற்றும் 8 ஆகிய பகுதிகளில் 16 பணிகள் ரூ.2.62 கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் 55 பணிகள் ரூ.10.78 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள இன்று(23.02.2024) அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன.

தமிழ்நாடு முதலமைச்சர்  ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் சொன்ன வாக்குறுதிகள் மட்டுமல்லாமல் சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி ஒரு பொற்கால ஆட்சியை நடத்தி வருகிறார். அவர்களுக்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்” என்று கூறினார்

Next Story

“பெற்றோர்களிடம் இந்த மனப்போக்கு மாற வேண்டும்” - ஆளுநர் ரவி

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
RN Ravi says it is wrong for parents not to allow their children to play sports

திருச்சி தேசிய கல்லுாரியில் விளையாட்டு வீரர்களின் 5 நாள் ஐ.சி.ஆர்.எஸ் கருத்தரங்கின் நிறைவு விழா நேற்று நடந்தது.  கல்லுாரி செயலாளர் ரகுநாதன் தலைமையில் நடந்த கருத்தரங்கின் நிறைவு விழாவில் ஆளுநர் ரவி பேசியதாவது, “விளையாட்டு வீரர்கள் போட்டிகளில் வெற்றி பெற்றாலும், தோல்வியுற்றாலும் அவர்கள் இந்த நாட்டின் சொத்துகள். 2008ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் அபினவ் பிந்த்ரா மட்டும் ஒரு தங்கப்பதக்கம் வென்ற போது ஒரு புறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், ஒரு பதக்கம் மட்டும் வென்றது சற்று மன வருத்தத்தைத் தந்தது. 

2010ம் ஆண்டு டில்லியில் காமன்வெல்த் போட்டிகள் நடந்தது. டில்லி விளையாட்டு கிராமத்தில் நடந்த விருந்தில் விஐபிக்கள் வரவில்லை என்பதற்காக வீரர்கள் சாப்பிடுவதற்கு 45 நிமிடங்கள் காத்திருக்கும் நிலைமை ஏற்பட்டது. இதுபோல வீரர்களை நடத்தக் கூடாது. பதக்கம் வென்றவர்களுக்கு அரசுகள் கோடிக்கணக்கில் பரிசு கொடுப்பதை போல விளையாட்டு உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டும். பிரதமர் மோடி அறிவித்த  பிட் இந்தியா திட்டத்தின் படி பல்வேறு விளையாட்டு மேம்பாட்டு நிகழ்ச்சிகள் நடக்கிறது. 

சமீபத்தில் நடந்த சர்வதேச போட்டிகளில் இந்திய வீரர்கள் பதக்கம் குவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.  தங்கள் குழந்தைகள் விளையாடினால் அதிக மதிப்பெண் பெற முடியாது என நினைத்து பெற்றோர்கள் விளையாட்டில் ஈடுபட அனுமதிக்காதது தவறாகும். பெற்றோர்களிடம் இந்த மனப்போக்கு மாற வேண்டும். விளையாட்டில் ஈடுபடுவதால் உடல், மன வலிமை, தலைமை பண்பு, கூட்டு முயற்சி போன்ற திறமைகள் உருவாகும். இந்த விளையாட்டு கருத்தரங்கில் நாட்டின் பல பகுதிகளில் இருந்து அதிக அளவில் வீரர்கள், பயிற்சியாளர்கள் கலந்து கொண்டது சிறப்பாகும். வீரர்கள், பயிற்சியாளர்கள், விளையாட்டு மருத்துவர்கள், பயோ மெக்கானிக் அனைவர்களும் இணைந்து செயல்பட்டால்தான் விளையாட்டில் சிறப்பு நிலைமை அடைய முடியும். ஓட்டப்பந்தயத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக மைக்ரோ வினாடியில் போட்டியில் முடிவைக் கணிக்க முடிகிறது. நுாற்றாண்டு பாரம்பரிய பெருமை கொண்ட தேசியக் கல்லுாரிகளில் இது போன்ற விளையாட்டு கருத்தரங்கை அதிக அளவில் நடத்த வேண்டும்” என்றார். 

இந்தக் கருத்தரங்கில் 50 நாடுகளைச் சேர்ந்த சிறந்த விளையாட்டு வீரர்கள், வல்லுநர்கள், ஆர்வலர்கள் கலந்து கொண்டு ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். கருத்தரங்கில் ஆயுர்வேதம், போட்டிகளில் ஏற்படும் காயங்களுக்கான சிகிச்சை, உணவு மேலாண்மை, உடற்பயிற்சி, யோகா,மருத்துவம், விளையாட்டு கட்டமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விவாதங்கள், குறும்பட போட்டி நடந்தது. நிகழ்ச்சியில் ஒலிம்பியன் பாஸ்கரன், எக்ஸல் நிறுவன சேர்மன் முருகானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர். துணை முதல்வர் பிரசன்ன பாலாஜி கருத்தரங்கம் குறித்த அறிக்கை மற்றும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வாசித்தார். முன்னதாக கல்லுாரி முதல்வர் குமார் வரவேற்றார்.