பொதுப்பணித்துறைஅமைச்சர் எ.வ. வேலுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகபொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் அண்ணா நகர், தியாகராய நகர், கீழ்ப்பாக்கம், வேப்பேரி உள்ளிட்ட இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதேபோன்று திருவண்ணாமலையில் உள்ள அமைச்சருக்குச் சொந்தமான கல்வி நிறுவனங்கள் மற்றும் வீடுகளிலும் இந்தச் சோதனையானது நடைபெற்று வருகிறது. காலை முதலே நடந்துவரும் இந்தச் சோதனையானது, ஏற்கனவே அமைச்சர் எ.வ. வேலு மீதுஇருக்கும் சொத்துக்குவிப்பு வழக்கின் காரணமாக நடத்தப்படுவதாகத்தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் எதன் அடிப்படையில் வருமான வரிச் சோதனை நடைபெறுகிறது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. சோதனை முடிவில் இது குறித்து முழு விவரமும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.