Skip to main content

‘இயேசு அழைக்கிறார்’ பால் தினகரனுக்கு சொந்தமான 28 இடங்களில் வருமானவரித்துறையினர் திடீர் சோதனை... (படங்கள்)

Published on 20/01/2021 | Edited on 20/01/2021

 

கிறிஸ்துவ மதபோதகர் பால் தினகரனுக்கு சொந்தமான 28 இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். 

 

‘இயேசு அழைக்கிறார்’ என்ற பெயரில் மத பிரச்சாரக் கூட்டங்கள் நடத்திவரும் பால் தினகரினின் வீடு, அலுவலகங்கள் என மொத்தம் 28 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். காலை எட்டு மணிக்குத் தொடங்கிய சோதனை, சென்னை பாரிமுனை, அடையாறு, கோவை காருண்யா பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் தொடர் சோதனை நடத்திவருகின்றனர். 

 

கல்வி நிறுவனம், ஜெபக் கூட்டங்களிலிருந்து வரக்கூடிய வருமானத்தைக் குறைத்துக் காட்டியதாகவும், வெளிநாடுகளிலிருந்து வரக்கூடிய முதலீடுகள் குறித்தும் சோதனை நடந்து வருவதாக வருமான வரித்துறையினர் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்குச் சொந்தமான வீடு, அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மட்டுமின்றி அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான வீடு, அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.

 

இந்த சோதனையில் 200-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் முதல்கட்டமாக வெளிநாட்டிலிருந்து வரும் முதலீடு சம்பந்தமான ஆவணங்கள் கைப்பற்றியிருப்பதாக வருமான வரித்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுமையாக சோதனை முடிந்த பிறகுதான் முழு விவரங்களும் தெரியவரும் என வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

5 ஆவது நாளாகத் தொடரும் ரெய்டு 

Published on 07/11/2023 | Edited on 07/11/2023

 

 Raid continues for 5th day

 

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலுக்குச் சொந்தமான இடங்களில் நான்கு நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில் ஐந்தாவது நாளாக இன்றும் சோதனையானது தொடர்ந்து வருகிறது.

 

திருவண்ணாமலையில்  எ.வ. வேலுவின்  வீடு, கல்லூரி ஆகிய இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் அசோக் நகர், தியாகராய நகர், கீழ்பாக்கம், வேப்பேரி பகுதிகளிலும் அருணை பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, மகளிர் கலைக்கல்லூரி பாலிடெக்னிக் மற்றும் பன்னாட்டு பள்ளி என 40 இடங்களில் சோதனையானது  நடைபெற்று வருகிறது. துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்புடன் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

 

 

Next Story

கர்நாடகாவில் உள்ள ஜி ஸ்கொயர் அலுவலகத்திலும் வருமான வரித்துறை சோதனை

Published on 24/04/2023 | Edited on 24/04/2023

 

The Income Tax department also raided the G Square office in Karnataka

 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக அமைச்சர்கள் குறித்த வீடியோ ஒன்றை காட்சிப்படுத்தினார்.  அந்த வீடியோவில் திமுகவைச் சேர்ந்த முக்கியமானவர்களின் சொத்து மதிப்புகள் குறித்து காட்சிகள் இருந்தன. அண்ணாமலை வெளியிட்ட இந்த சொத்து பட்டியலில் திமுகவை ஜி ஸ்கொயர் நிறுவனத்தோடு இணைத்து பேசியிருந்தார்.

 

இந்நிலையில் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ள ஜி ஸ்கொயர் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ' ஜி ஸ்கொயர் நிறுவனம் திமுக குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமானதோ அல்லது அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனமோ அல்ல. தமிழகத்தில் திமுக ஆட்சி அமைப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறோம். பத்தாண்டுகளாக மக்கள் மத்தியில் கட்டுமானத்துறையில் மிகச் சிறந்த நிறுவனமாக இருக்கிறோம். தங்கள் நிறுவனம் 2012 ஆம் ஆண்டு அக்டோபர் 12 பதிவு செய்யப்பட்டுள்ளது. எங்களுடைய சொத்து மதிப்பு என அண்ணாமலை குறிப்பிட்டுள்ள தொகை தவறானது.

 

தவறான முறையில் நாங்கள் சொத்து சேர்த்திருப்பதாக மக்களை நம்ப வைக்கும் படி ஜோடிக்கப்பட்டுள்ளது. அதிகளவு நிலங்களை ஒரே சமயத்தில் கையகப்படுத்தியதாகவும், அதிக வருமானம் ஈட்டியதாகவும் தவறான பல கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளார். அண்ணாமலையின் செயலால் பல ஆண்டு உழைப்பில் பெறப்பட்ட வாடிக்கையாளர்களின் நம்பிக்கை சிதைந்துள்ளது. படித்த மரியாதைக்குரிய தலைவர் முன்வைக்கும் கருத்துக்களை மக்கள் நம்பும் ஆபத்து இருக்கிறது' என விளக்கம் அளித்துள்ளது ஜி ஸ்கொயர் நிறுவனம்.

 

தொடர்ந்து சென்னை, திருச்சி, கோவை உட்பட தமிழகத்தில்  50க்கும் மேற்பட்ட இடங்களில் ஜி ஸ்கொயர் நிறுவன அலுவலகங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் ஆழ்வார்பேட்டை, நுங்கம்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவன அலுவலகங்களில் இந்த சோதனையானது நடத்தப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில் தமிழகத்தை தாண்டி கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் அலுவலகங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை ஈடுபட்டுள்ளனர். கர்நாடகாவில் பெங்களூருவில் உள்ள  கோரமங்களா என்ற இடத்தில் இருக்கும் ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.