
வருமான வரித்துறையினர் 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம் படூர், சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். அதே போன்று பள்ளிக்கரணை, நீலாங்கரை, எண்ணூர், ஓஎம் ஆர் நாவலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
பொன்னேரி வெள்ளி வாயில் சாவடியில் உள்ள தனியார் பொறியியல் நிறுவனத்தில் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகார் தொடர்பாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. காலை 7 மணியளவில் இருந்து இந்த சோதனை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.