Skip to main content

சரவணா ஸ்டோர்களில் வருமானவரித்துறையினர் சோதனை! (படங்கள்)

 

சென்னையில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர் கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டுவருகிறார்கள். தமிழ்நாடு முழுவதும் பெரிய அளவில் கடைகளை நடத்திவரும் சூப்பர் சரவணா ஸ்டோர் நிறுவனம் மீது வருமானவரித்துறையினருக்குப் புகார் வந்ததையடுத்து இந்த சோதனை நடத்தப்படுகிறது.

 

இதனையடுத்து அனைத்து கடைகளுக்கு முன்பும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில், சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோர் அனைத்து கடைகளில் வருமான வரித்துறையினர் தற்போது சோதனை நடத்திவருகின்றனர்.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !