விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் முற்றிலும் முடிவடைந்து, இறுதி பணிக்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அப்படத்தின் இணை தயாரிப்பாளர் லலித் குமாரின் வீட்டிலும், அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் நேற்று சோதனையிட்டனர்.

அதுமட்டும் இல்லாமல் இன்று காலை 11 மணி முதல் ஏற்கனவே பிகில் பட விவகாரத்தில் நடிகர் விஜய் வீட்டில் சோதனை நடத்திய அதே 8 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் சோதனை நடத்தினர். இந்த விசாரணை தற்போது நிறைவடைந்துள்ளதாக தெரிவித்த வருமான வரித்துறை அதிகாரிகள், நடிகர் விஜய் பிகில் படத்திற்கு 50 கோடி ரூபாயும், மாஸ்டர் படத்திற்கு 80 கோடி ரூபாயும் சம்பளமாக பெற்றுள்ளதாகவும், அதற்கு அவர் முறையாக வருமான வரி செலுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.