/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/aFSAFSGFDGDGDFG.jpg)
திருச்சியில் தொழிலதிபர் ஒருவரின் பேரன் பணம் கேட்டு கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி கன்டோன்மென்ட் வார்னர்ஸ்சாலையில், வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த சிறுவன் 4 பேரால் கடத்தப்பட்ட புகாரில்4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 6 கோடி ரூபாய் கேட்டு தொழிலதிபரின் பேரனைகடத்திய புகாரில் சரவணன், மணிகண்டபாண்டியன், சதீஷ், செல்வகுமார்ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிசிடிவி கேமரா பதிவை கொண்டு கார்சென்ற இடத்தை கண்டறிந்து 4 பேரையும் சுற்றி வளைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் திருச்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப்பட்ட நிலையில், அவர்கள் 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)