Skip to main content

ஆன்லைன் கேம் அப்டேட்... 12 வயது சிறுவனால் 90 ஆயிரத்தை இழந்த பெற்றோர்!!

Published on 19/09/2020 | Edited on 19/09/2020

 

incident in ramanathapuram

 

ஆன்லைன் விளையாட்டிற்காக, பெற்றோர்களுக்குத் தெரியாமல் மூன்றே மாதத்தில் 90 ஆயிரத்தை பள்ளிச் சிறுவன் செலவு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில், 12 வயது சிறுவன் கரோனா நோய்த்தொற்று பொதுமுடக்கம் காரணமாக வீட்டில் இருந்த நிலையில், மொபைலில் ஆன்லைன் கேம்களை விளையாட ஆரம்பித்துள்ளார். பெற்றோர்களும் சிறுவன் அமைதியாக வெளியே செல்லாமல் இருப்பதால் இதனைக் கண்டுகொள்ளாமல் விட்ட நிலையில், மூன்று மாதங்களுக்குப் பிறகு வங்கிக் கணக்கில் இருந்த 90 ஆயிரம் ரூபாய் காணாமல் போனதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் வங்கியில் பண பரிவர்த்தனை தொடர்பான தகவல்களைக் கேட்ட பொழுது, மூன்றே மாதத்தில் சிறிய சிறிய தொகையாக 90,000 ரூபாய் வங்கிக் கணக்கில் இருந்து எடுக்கப்பட்டது தெரியவந்தது.

இதுதொடர்பாக அந்தச் சிறுவனிடம் பெற்றோர்கள் விசாரிக்கையில், ஆன்லைன் கேம் விளையாடுவும், ஆன்லைன் கேம்களை அப்டேட் செய்வதற்காகவும் வங்கிக் கணக்கை இணைத்துள்ளார். அதேபோல் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப் பட்டதற்கான குறுஞ்செய்தியை அவ்வப்போது அழித்தும் வைத்துள்ளார். இதனால் இந்த விஷயம் பெற்றோர்களுக்குத் தெரியாத நிலையில், இறுதியாக 90 ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டது தெரியவந்தது.

 

Ad

 

தவறு செய்த சிறுவனுக்கு பெற்றோர்கள் 1 லிருந்து 90 ஆயிரம் வரை எழுத எழுதச்சொல்லி தண்டனை வழங்கியுள்ளனர். ஆன்லைன் விளையாட்டுகள் மட்டுமல்ல, அனைத்துவிதமான இணைய சேவைகளையும் அப்டேட் செய்வதற்காக, வங்கிக் கணக்குகளை இணைப்போம். ஆனால் அடுத்த முறை, அப்டேட் செய்யப்படும் பொழுது தானாகவே இணைக்கப்பட்ட வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால், கூடுதல் விழிப்புணர்வுடன் விதிமுறைகளைப் படித்த பிறகு ஆன்லைன் சேவைகளில் வங்கிக் கணக்குகளை இணைக்க வேண்டும் எனத் துறைசார்ந்த வல்லுனர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

''குசும்ப பாருங்க... வாட்ஸ் அப்பில் இப்படியெல்லாம் பரப்புகிறார்கள்''-ஓபிஎஸ் ஆதங்கம்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
They are spreading all this on WhatsApp" - OPS

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் பரப்புரையில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய சின்னத்தை திராட்சை கொத்து என பலர் வாட்ஸ் அப்பில் தவறாக பரப்புவதாக குற்றச்சாட்டையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

ராமநாதபுரத்தில் திறந்தவெளி வேனில் பிரச்சாரம் மேற்கொண்ட ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், ''நான் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறேன். சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுபவர்கள் மூன்று சின்னங்களைக் குறிப்பிட வேண்டும். நான் மூன்று சின்னங்களைக் குறிப்பிட்டு கொடுத்திருந்தேன். இப்பொழுது நிறைய பன்னீர்செல்வங்கள் வந்து விட்டார்கள். என்னுடன் சேர்த்து ஆறு பன்னீர்செல்வம். மற்ற ஐந்து பேரும் நான் என்னென்ன சின்னம் எழுதிக் கொடுத்தேனோ அதே சின்னத்தை எழுதி கொடுத்திருக்கிறார்கள். ஒரு குழப்ப சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று அப்படி செய்துள்ளார்கள். இப்பொழுது என்ன செய்திருக்கிறார்கள் என்றால், குசும்பு பாருங்க, ஓபிஎஸ் சின்னம் வாளி என வாட்ஸ் அப்பில் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஓபிஎஸ் சின்னம் திராட்சை கொத்து என வாட்ஸ் அப்பில் பரப்புகிறார்கள்.

நான் எழுதிக் கொடுத்த மூன்று சின்னங்களையும் ஓபிஎஸ் சின்னம் ஓபிஎஸ் சின்னம் என்று செல்லில் இன்று பறக்கவிட்டு வருகிறார்கள். இது எவ்வளவு கீழ்த்தரமான அரசியல். ஒரு சின்னத்தை இரண்டு வேட்பாளர்கள் கேட்டால் குலுக்கள் முறையில் கொடுப்பார்கள். சின்னம் ஒதுக்குவது குறித்து நேரம் காலம் ஒதுக்கப்பட்டது. உங்களுடைய வாழ்த்துக்களால், ஆசிர்வாதத்தால் நீங்கள் தந்த வரத்தினால் முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் சின்னம் கிடைத்துள்ளது. அது உங்களால் தான் கிடைத்தது. உங்கள் ஆசியால் எனக்கு இந்தச் சின்னம் கிடைத்தது''என்றார்.

Next Story

பள்ளிப் பேருந்து விபத்து; மாணவர் சொன்ன பகீர் காரணம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
School bus incident The reason given by the student 

ஹரியானா மாநிலம் மகேந்திரகர் அருகே கனினா என்ற இடத்தில் தனியார் பள்ளிப் பேருந்து விபத்துக்குள்ளானதில் 5 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் இருந்த 15 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மானவர்கள் மருத்துவமணையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த மாணவர்களை ஹரியானா கல்வி அமைச்சர் சீமா த்ரிகா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் பேசுகையில், “நான் இப்போதுதான் மாத்ரிகா மருத்துவமனைக்கு வந்தேன். மூன்று குழந்தைகளை மட்டுமே சந்தித்தேன். மூவரும்  காயமடைந்துள்ளனர். அவர்களின் உடைகள் முழுவதும் ரத்தம் உள்ளது. மருத்துவர்களின் அறிவுரைப்படி இங்கு உரிய சிகிச்சை அளிக்க முடியும்; சிலருக்கு பலத்த காயங்கள் உள்ளன” எனத் தெரிவித்தார்.

இந்த விபத்தில் காயமடைந்த மாணவர் ஒருவர் கூறுகையில், “பேருந்து ஓட்டுனர் குடிபோதையில் 120 கி.மீ. வேகத்தில் பள்ளிப் பேருந்தை ஓட்டினார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது” எனத் தெரிவித்தார். இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.