Skip to main content

பெண் மந்திரவாதியின் பேச்சை கேட்டு மகளை கொன்ற தந்தை, உறவினர் கைது!!

Published on 02/06/2020 | Edited on 02/06/2020
incident in pudukottai



புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள நொடியூர் கிராமத்தில் கடந்த மாதம் 18 ந் தேதி குடிதண்ணீர் எடுக்க குளத்திற்கு சென்ற 13 வயது சிறுமி வீடு திரும்பவில்லை. தாய் மற்றும் சகோதரிகள் தேடிச் சென்றபோது அரை கி.மீ தூரத்திற்கு அந்தப்பக்கம் தைலமரக்காட்டில் கழுத்து நெறிக்கப்பட்டு வாய் பேச முடியாத நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.


ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமி இறந்தார். சம்பவம் நடந்த இடத்திற்கு சென்ற புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் 6 தனிப்படைகளை அமைத்து சிறுமி கொலைக்கு காரணமானவர்களை தேடுவதாக கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மாதர் சங்கம் கொலையாளிகளை கைது செய்யும் வரை சிறுமியின் சடலத்தை வாங்க மாட்டோம் என்றனர். போலீசார் உத்தரவாதம் கொடுத்த பிறகு சடலம் வாங்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

 

 

incident in pudukottai


மகளின் கொலைக்கு காரணமானவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிறுமியின் தாய் இந்திரா காவல் நிலையத்தில் கொடுத்திருந்த நிலையில் சந்தேகப்பட்ட அனைவரையும் போலீசார் பிடித்து வந்து விசாரணை செய்தனர். ஆனாலும் மகள் இறந்த வருத்தம் இல்லாமல் சகசஜமாக இருந்த தந்தை பன்னீர் மீது உறவினர்கள் முதல் போலீசார் வரை அனைவருக்கும் சந்தேகம் ஏற்பட்டது.

அனைத்து சடங்குகளும் முடியும் வரை காத்திருந்த போலீசார் அதன் பிறகு பன்னீரை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை செய்தபோதுதான் அதிர்ச்சி காத்திருந்தது. செல்வம் நிறைய சேர வேண்டும் என்றால் மகளை பலி கொடுத்து பூஜை செய்ய வேண்டும் என்று புதுக்கோட்டை பெண் மந்திரவாதி வசந்தி சொன்னதால் தனது இரண்டாவது மனைவி மூக்காயி மற்றும் உறவினர் குமாருடன் இணைந்து மகளை கொல்ல திட்டமிட்டதுடன், முதல் நாள் இரவு பிடாரி கோயில் அருகில் உள்ள குளத்தில் பெண் மந்திரவாதி பூஜைகள் செய்துள்ளார். அவர்களுக்கு துணையாக முருகாயி என்ற பெண்ணும் இருந்துள்ளார்.

 

incident in pudukottai


பூஜை நடந்து முடிந்த மறுநாள் குடிதண்ணீர் எடுக்க தனியாக சென்ற மகளை தைலமரக்காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்ற பன்னீர், குமார் மற்றும் தனது இரண்டாவது மனைவியுடன் இணைந்து சிறுமியின் கழுத்தை துண்டு மற்றும் சேலையால் நெறிக்க துடிதுடிக்க மயங்கி கீழே சரிந்த பிறகு மற்றவர்களை போகச் சொல்லிவிட்டு சந்தேகம் வராமல் இருக்க மயங்கிக் கிடந்த மகளின் உள்ளாடைகளை கழற்றிவிட்டு இறந்துவிட்டதாக நினைத்து அங்கிருந்து சென்றுவிட்டார். அதன் பிறகே தாய் இந்திரா தேடிச் சென்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மகளை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.


இந்தநிலையில் கடந்த 30 ந் தேதி தனது இரண்டாவது மனைவி மூக்காயியும் உடல்நலமின்றி இறந்துவிட்டார். இவ்வாறு போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக போலீசார் அறிக்கை கொடுத்துள்ளனர். இதில் பன்னீர் மற்றும் குமார் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் கொலைக்கு பயன்படுத்திய துண்டு, சேலை, செல்போன்கள், மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் பெண் மந்திரவாதி மற்றும் அவரது உதவியாளர் இருவரையும் தேடி வருகின்றனர்.

நரபலி பூஜை என்றால் பூஜை நடக்கும் போதோ அல்லது சிறுமியின் ரத்தத்தை வைத்தோதான் பூஜை செய்யப்படும். ஆனால் இங்கே பூஜை முதல் நாள் நடந்து முடிந்த பிறகு சிறுமி கழுத்து நெறிக்கப்பட்டுள்ளார். அவரது உடலில் இருந்து ரத்தமும் எடுக்கப்படவில்லை. அப்பறம் எப்படி நரபலிக்காக சிறுமி கொல்லப்பட்டிருக்க முடியும். வேறு காரணங்களுக்காக கொல்லப்பட்டிருக்கலாமா? என்ற சந்தேகம் உறவினர்களிடம் எழுந்துள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்