INCIDENT IN BALAMEDU MADURAI

மதுரையில், அண்ணன் காதலித்தபெண்ணைதம்பி திருமணம் செய்துகொண்டதால் மனமுடைந்தஅண்ணன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

மதுரை மாவட்டம் பாலமேடுபகுதியைச் சேர்ந்தசல்லிகோடாங்கிப்பட்டியில் வசித்து வந்தவர் பெரியகருப்பன்.டிப்ளமோ படித்திருக்கும் பெரியகருப்பன் நான்கு வழிச்சாலைஅமைக்கும்பணியில்மேற்பார்வையாளராகப் பணிசெய்துவந்தார். பெரியகருப்பனின் தம்பியானசின்னகருப்பன் அதே ஊரில் மைக்செட்ஆப்ரேட்டராகப் பணிசெய்து வந்தார்.

Advertisment

INCIDENT IN PALAMEDU MADURAI

இந்நிலையில், பக்கத்துக்கு ஊரானபொய்கைகரைபட்டியில் 16 வயது சிறுமி ஒருவரைபெரியகருப்பன் காதலித்துவந்ததாகக் கூறப்படுகிறது. அவரைத்தான் தான் திருமணம் செய்துகொள்ளப்போதகவும் பெரியகருப்பன் அடிக்கடி கூறிவந்துள்ளார். இப்படி இருக்க,மைக்செட்ஆபரேட்டரான சின்னகருப்பன் அந்தச் சிறுமியிடம் பேசிப் பழகி காதலித்துள்ளார். சிறுமியும்சின்னகருப்பனையே காதலித்ததாகக் கூறப்படுகிற நிலையில், வீட்டில்எதிர்ப்பு கிளம்ப, வீட்டைவிட்டு வெளியேறி சின்னகருப்பனும் அந்தச் சிறுமியும் திருமணம் செய்துகொண்டனர்.

இந்நிலையில், தான்காதலித்த பெண்ணைதம்பி திருமணம் செய்துகொண்டதை அறிந்தஅண்ணன் பெரியகருப்பன் மனமுடைந்து வீட்டில்தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.தன்னால் அண்ணன் தற்கொலை செய்துகொண்டதை அறிந்தசின்னகருப்பனும் அவருடைய காதலியான அந்தப் பெண்ணும்விஷம் அருந்திதற்கொலைக்குமுயற்சி செய்த நிலையில்,இவரும்மதுரைஅரசு மருத்துவமனையில்அவசர சிகிச்சைப் பிரிவில்சேர்க்கப்பட்டுள்ளனர்.

Advertisment

அண்ணன் காதலித்த பெண்ணைதம்பி திருமணம் செய்துகொண்டதால் அண்ணன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும்அதிர்ச்சியையும்ஏற்படுத்தியுள்ளது.