ஆரம்பத்தில் காதலிப்பதாக நடித்து பிறகு திருமணம் செய்து கொள்வதாக கூறி உல்லாசத்தில்ஈடுபட்டு இனி உன்னை திருமணம் செய்துமுடியாது, என ஏமாற்றபட்ட முன்னாள்காதலியை, ஓராண்டுக்கு பிறகு ரகசியமாக எடுத்து வைத்திருந்த வீடியோக்களை காட்டி மீண்டும் நெருக்கமாக இருக்க அழைத்தசம்பவம் அந்த பெண்ணை கண்ணீர்விட வைத்துள்ளது.

Advertisment

INCIDENT IN NAGAI... POLICE ARREST

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகேயுள்ள விவசாயம் சார்ந்த கிராமம் பாலையூர். அங்கு வசிக்கும் ராமனின் மகன் வினோத். 32 வயதான இவர் அதேபகுதியை சேர்ந்த ஒருபெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி நெருக்கமாக பழகியுள்ளான். தான் நெருக்கமாக இருப்பதை போட்டோ மற்றும் வீடியோஎன மறைமுகமாக எடுத்து வைத்திருந்திருக்கிறான் வினோத்.

பிறகு அந்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியாது என வலுக்கட்டாயமாக மறுத்துவிட்டதால் அந்த பெண் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். இப்படி ஒரு ஆண்டு கடந்துவிட்ட நிலையில் அந்தப்பெண்ணை சில தினங்களுக்கு முன்பு வழியில் மீண்டும் சந்தித்த வினோத், அவர் மீது மீண்டும் ஆசைப்பட்டு அவரை உல்லாசத்துக்கு அழைத்துள்ளான். அந்த பெண் மறுத்ததால் போட்டோவை காட்டி மிரட்டி கட்டாயப்படுத்தியிருக்கிறான்.

Advertisment

அதிர்ச்சியில் உறைந்துபோன அந்த பெண் பாலையூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கஇன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து வினோத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.