incident in krishnagiri... cctv footage

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேதம்பதியினர் பயணித்தபைக்கின்மீதுலாரிமோதியதில் இருவரும் உயிரிழக்க, அவர்கள் கையில் வைத்திருந்த 4 மாதக் குழந்தை பரிதவித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்து தொடர்பாகசிசிடிவிகாட்சிகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கிருஷ்ணகிரி மாவட்டம்பர்கூர்அருகே வசித்து வருபவர் அன்பு. இவர் தனது மனைவி மற்றும் நான்கு மாதக் கைக்குழந்தையுடன் பைக்கில்ஓசூரிலிருந்து அவர்களது சொந்த ஊர் நோக்கிச் சென்றுள்ளார். இந்நிலையில் சாலையைக் கடக்க முயன்றலாரி ஒன்றுபின்னால் இருந்த இவர்களைகவனிக்காமல் மோதியது. இந்த விபத்தில் நான்கு மாதக் குழந்தை உட்பட மூன்றுபேரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில்அன்புவின்மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் அன்பு பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றிஅன்பும்உயிரிழந்தார். தற்பொழுது இந்தவிபத்து தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பெற்றோரை இழந்து பரிதவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது நான்கு மாதக் குழந்தை. இந்த விபத்து தொடர்பான புகைப்படங்களும், விபத்து நடந்த இடத்திலிருந்தவர்கள் குழந்தையைக் காப்பாற்றிய புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Advertisment