Published on 18/10/2020 | Edited on 18/10/2020
கோவை பாலக்காடு சாலையில் கஞ்சா கடத்தப்படுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருமலையம்பாளையம் பாலத்துறை பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த போது அவ்வழியாக வந்த ஒரு லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அந்த லாரியில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறை விசாரணை செய்த போது இந்த லாரி கேரளா மாநிலம் மணப்புரம் பகுதியைச் சேர்ந்த முனீர் என்பவருக்கு சொந்தமானது.
மேலும் இந்த லாரியில் பயணித்த ஊர்க்காவல் படையை சேர்ந்த செரீப் மற்றும் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த அனாஸ் ஆகியோர் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து மூவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் கைது செய்துள்ளனர். லாரி உரிமையாளர் முனீரைத் தேடிக் கொண்டிருக்கின்றனர்.