கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள வெங்கடசபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி ஜெயப்பிரியா (26). இவர்கள் இருவரும் குண்டு உப்பளவாடி கடலூர் பகுதியில் வசித்து வருகின்றனர்.ஜெயப்பிரியா பெண் காவலராக தஞ்சாவூர் மாவட்டம் திரு நீலக்குடி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார்
இந்த நிலையில், விருதாச்சலம் அருகே உள்ள கொக்கான் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராமநாதன் மகன் விஜயகுமார் என்பவர், தவறான முறையில் செல்போன் மூலம் பெண் காவலர் ஜெயப்பிரியாவுக்கு மெசேஜ் அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காட்டுமன்னார்கோயில் போலீசார், விஜயக்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், அவர் பா.ஜ.க ஓபிசி அணி மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து வருகிறார் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.