Skip to main content

மனைவியின் பிரிவு... உயிரைக் கொடுத்த கணவன்!

Published on 02/11/2020 | Edited on 02/11/2020

 

erode

 

ஈரோடு மாவட்டம் கோபி கணக்கம்பாளையம் செட்டியார் வீதியைச் சேர்ந்த மாதவன் மகன் பூபதி (45). கட்டிடத் தொழிலாளியான இவருக்கு முத்தமிழ்ச் செல்வி என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். பூபதிக்கும், முத்தமிழ்ச் செல்விக்கும் குடும்ப வாழ்க்கையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் முத்தமிழ்ச் செல்வி சென்ற ஆண்டு நீதிமன்றம் மூலம் விவாகரத்துப் பெற்று தனது இரண்டு குழந்தைகளுடன் பிரிந்து சென்றார். இதனால் வீட்டில் பூபதி மட்டும் தனியாக வசித்துவந்துள்ளார்.

இந்த நிலையில், மனைவி குழந்தைகள் பிரிந்து சென்றதால் தொடர்ந்து மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் பூபதி, நீதிமன்றத் தீர்ப்பு நம் பக்கம் இருக்கட்டும். மீன்டும் சேர்ந்து வாழ்வோம் என தனது மனைவியான முத்தமிழ்ச் செல்வியிடம் உறவினர் மூலம் பேசிப் பார்த்தார். ஆனால் சட்டப்படி பிரிந்து விட்டோம் என அவரது மனைவி உறுதியுடன் கூறிவிட்டார். மனைவியுடன் சந்தோஷமாக வாழ்ந்த வீட்டில் தனிமை, பூபதியை மிகவும் வாட்டியது. இதனால், நேற்று முன்தினம் இரவு, வீட்டில் மனைவியின் சேலையால் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தப் பரிதாப சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பங்களாபுதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கணவன் இறந்த பிறகு, துக்கத்திற்கு வந்த மனைவி நீண்ட நேரம் அழுது புரண்டுள்ளார். இனி என்ன பயன் என உறவினர்கள் தேற்றியுள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அடர்ந்த வனப் பகுதியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
girl child was born in the 108 ambulance near Anthiyur in a thick forest area at night

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுக்கா, ஓசூர் அருகே சின்ன செங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரசு என்கிற சரசா (27). சரசு நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 9:45 மணியளவில் சரசுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் தேவர்மலையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் குழுவினருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று சரசை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது மணியாச்சி பள்ளம் என்ற அடர்ந்த வனப் பகுதியில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது சரசுக்கு பிரசவ வலி அதிகரித்தது. நிலைமையைப் புரிந்து கொண்ட மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு சரசுக்கு பிரசவம் பார்க்க தொடங்கினர். இதில் சரசுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  108 மருத்துவ குழுவினருக்கு சரசு மற்றும் அவரது உறவினர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.