Skip to main content

இறந்தது 'உயிர்' மட்டுமல்ல 'மனிதநேயமும்' தான்-திண்டுக்கல்லில் நிகழ்ந்த பதைபதைப்பு சம்பவம்!!

Published on 31/08/2020 | Edited on 31/08/2020

 

incident in dindigul

 

'மனித உயிர் விலை மதிப்பற்றது' எனும் கூற்று சில நேரம் மனிதநேயமற்ற மனிதர்களால் பொய்யாகவே போய்விடுகிறது. அப்படி ஒரு இரக்கமற்ற உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது திண்டுக்கல்லில்.

திண்டுக்கல் கொடைக்கானலில் உள்ள கேசிபட்டியில் சாலை அருகிலுள்ள டீ கடை வாசலில் இளம்பெண் ஒருவர் தனது உடலின் மீது பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொள்ள முற்பட்டுள்ளார். ஆனால் டீ கடையில் டீ குடித்தவர்கள் உட்பட சாலையில் நடந்து சென்ற எவரும் அவரை கண்டுகொள்ளவில்லை. அந்த இளம்பெண் பெட்ரோலில் நனைந்த உடலுடன் தீப்பெட்டியை எடுத்து உரச, கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த ஒருவரும் எதற்கு பிரச்னை என்ற எண்ணத்துடன் கையிலிருந்த டீ க்ளாசோடு நகர்ந்தார்.

 

incident in dindigul


அழுத கண்ணீருடன் சேலையின் முந்தானையை தீ வைத்துக் கொண்ட அந்த இளம்பெண் சற்று நேரத்தில் உடலெல்லாம் தீ பரவி கொழுந்துவிட என்னை காப்பாற்றுங்கள்.. என்னை காப்பாற்றுங்கள்... என அலறியபடி சாலையில் உருண்டார். அப்பொழுது கூட சிறு சலனம் கூட இல்லாமல் சாலையில் மனிதநேயத்தின் கண்களை கறுப்பு துணியால் கட்டியதைப்போல் திரும்பிக் கூட பார்க்காமல் சென்றது பல மனித தலைகள். இந்தச் சம்பவத்தை கண்டவர்களில் ஒருவர் பதைபதைத்து ஓடிவந்து கட்டியிருந்த வேட்டியை அவிழ்த்து தீயை அணைக்க முற்பட, சற்று நேரத்தில் அந்த இடம் பரபரப்பாகியது. ஆனாலும் அடுத்த நிமிடத்திலேயே முழுவதுமாக எரிந்து உயிரை விட்டார் அந்த இளம்பெண்.

 

incident in dindigul


இதில் மிகவும் கொடுமையான விஷயம் இந்த காட்சிகள் முழுவதும் ஆரம்பத்திலிருந்து இளம்பெண் உயிரிழந்தது வரை ஒருவர் தனது மொபைல் போனில் எந்த ஒரு சலனமும் இன்றி, சிறிதுகூட கேமராவை ஆட்டாமல் முழுவதும்  வீடியோ எடுத்துள்ளார் என்பது  மனித நேயம் மண்ணில் புதைந்து விட்டதோ என்று எண்ணத்தோன்றும் அளவிற்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோ காட்சிகள் பார்க்கவே பதைபதைப்பை ஏற்படுத்துகிறது.

 

incident in dindigul


இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்கையில், சாலையில் தீக்குளித்துக் கொண்ட அந்த இளம்பெண் மாலதி என்பதும், கணவரை பிரிந்து வாழ்பவர் என்றும் தெரியவந்தது. அவருக்கு 6  வயதில் மகன் இருந்த நிலையில், ஓட்டுநர் சதீஷ் என்பவர் மாலதியை காதலித்துள்ளார். பெற்றோர்களுக்கு தெரியாமல் இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு மூன்று வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில் பெற்றோர் பார்த்த வேறொரு பெண்ணை  ஓட்டுனர் சதீஷ் திருமணம் செய்து கொண்டார்.

 

incident in dindigul


இந்த தகவலை அறிந்த மாலதி தனக்கு நியாயம் வேண்டும் என சதீஷின் வீட்டிற்குச் சென்றபோது, சதீஷின் உறவினர்கள் மாலதியை அடித்துத் துரத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்த மாலதி தேனீர் கடையில் குழந்தையை அமர வைத்துவிட்டு பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீ வைத்துள்ளார். ஆனால் அங்கு இறந்தது 'உயிர்' மட்டுமல்ல 'மனிதநேயமும்' தான்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.