incident in cuddalore

கடலூர் அருகில் உள்ளது அன்னவல்லி சீதகுப்பம் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் பாலசங்கர். வயது 29. இவரது மனைவி ரமாதேவி வயது பத்தொன்பது. மேற்படி இருவருக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் இருவரும் கடந்த 29ஆம் தேதி குமளம்குளம் கிராமத்திலுள்ள ரமாதேவியின் சித்தி சத்யாவின் வீட்டிற்கு தம்பதிகள் இருவரும் விருந்து சாப்பிட சென்றுள்ளனர்.

Advertisment

அங்கு விருந்து சாப்பிட்ட பிறகு ரமாதேவியை மட்டும் அங்கேயே விட்டுவிட்டு பாலசங்கர் மட்டும் தனது சொந்த ஊரான சீதகுப்பம் சென்றுள்ளார். பிறகு கடந்த ஒன்றாம் தேதி ரமாதேவியைஅழைத்து வருவதற்காக பாலசங்கர் குமளங்குளம் சென்றுள்ளார். அங்கு ரமாதேவி அவருடைய சித்தி சத்யா வீட்டில் இல்லை. இதையடுத்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் ரமாதேவி கிடைக்கவில்லை. இதையடுத்து பாலச்சங்கர் நடுவீரப்பட்டு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.அவரது புகாரின் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் ரமாதேவி தேடி வருகின்றனர்.புதுமணப்பெண் விருந்துக்கு சென்ற இடத்தில் மாயமானது குறித்து அவரது உறவினர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment