INCIDENT IN CUDDALORE

கடலூர் மாவட்டம் சி.என்.பாளையம், சொக்கநாதன் பேட்டையைச் சேர்ந்தவர் 61 வயது முத்து பாவாடை.இவரது வீட்டின் அருகில் பணம் கிடந்துள்ளது. அங்கு பணம் கிடந்ததை அதே ஊரைச் சேர்ந்த(21 வயது) சசிகுமார் என்பவரும், முத்து பாவாடை மகன் (21 வயது) மணிமாறனும் பார்த்துள்ளார். இதில் மணிமாறன் கீழே கிடந்த பணத்தை தன்னுடைய பணம் என்றுஎடுத்துக் கொண்டுள்ளார்.

Advertisment

இதைப் பார்த்த சசிக்குமார் அந்தப் பணம் தன்னுடையது என்று வாதம் செய்துள்ளார்.இருவரும் கீழே கிடந்த பணம் தங்களுடையது என ஒருவருக்கொருவர் விடாப்பிடியாக பிடிவாதம் செய்தனர். இதனால், தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.இந்தத் தகராறில்முத்து பாவாடையையும்,அவரது மாமியார் அஞ்சலையையும் சசிகுமார் தாக்கியுள்ளார்.இதில் காயமடைந்த இருவரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Advertisment

இதுகுறித்து முத்து பாவாடை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சசிகுமாரை கைது செய்துள்ளனர்.