கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொழுதூர் சாலையில் உள்ளது கொடிக்களம் கிராமம். இன்று அதிகாலையில் சாலையோரம் செல்லும் பொதுப்பணித்துறை வாய்க்காலில் சாக்கு மூட்டையில் சுற்றி கட்டப்பட்ட மூட்டை ஒன்று கிடந்தது. அதை சுற்றிலும் நாய்கள் கூட்டம் கடித்து குதறமூட்டையில் இருந்து துர்நாற்றம் வீசியது. அந்த வழியே சென்றவர்கள் இதை கண்டு திடுக்கிட்டனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
சாக்கு மூட்டையில் மனித உடல் கிடப்பதாக செய்தி மக்கள் மத்தியில் வேகமாக பரவியதை அடுத்துபெரும்கூட்டம் கூடி விட்டது. மக்கள் மூட்டை அருகே செல்ல அச்சப்பட்டனர். உடனே இச்செய்தி ஆவினங்குடி காவல் நிலையத்திற்க்கு தெரிவிக்கப்பட்டது. ஒரு எஸ்ஸை உட்பட மூன்று போலீசார் ஸ்பாட்டுக்கு விரைந்து வந்தனர். மூட்டை அருகே போலீஸ் செல்ல .. செல்ல... மக்கள் மனதில் லப்டப் அடிக்க தொடங்கியது. ஒரு வழியாக போலீஸ் மூட்டையை கிழித்து பார்க்க அதன் உள்ளே மாட்டின் கொம்புகள், குடல்கள், சதைகள் என வெளியே வந்து விழுந்தன இதைபார்த்த பொதுமக்கள் அடச்சே என்றபடியே கலைந்து சென்றனர்.