
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஆவடி அருகே வாட்டர் ஹீட்டரை ஆன் செய்தபோது மின்சாரம் தாக்கி கணவன் மனைவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்பொழுது பழைய வண்ணாரப்பேட்டையில் முதியவர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள துரித உணவகம் ஒன்றில் உதவியாளராகப் பணியாற்றிவந்த வெங்கடேசன் என்ற முதியவர், கடையில் உள்ள சுவிட்ச் பாக்ஸில் கைவைத்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னையில் பல இடங்களில் தொடர்ந்து மழைபொழிந்து வருவதால், மின் சாதனங்களைப் பாதுகாப்பாகப் பயன்படுத்த வேண்டும் என மின்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.