
சர்ச்சை வீடியோ ஒன்றால் உலகப் புகழ் பெற்றவர் நித்தியானந்தா. இதையடுத்து, மதுரை ஆதினத்துடன் ஏற்பட்ட தகராறு, பாலியல் பலாத்காரம், கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளால், அவர் மீது குற்றச்சாட்டு கிராஃப் கிடுகிடுவென ஏறிக்கொண்டே போனது. இதன் தொடர்ச்சியாக, அகமதாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை தேடிவந்தனர். இதனால், இந்தியாவை விட்டே தப்பியோடிய நித்தியானந்தா, ஆஸ்திரேலியாவுக்கு அருகே உள்ள தீவில் அடைக்கலம் ஆனதாக சொல்லப்படுகிறது.

நித்தியானந்தாவுக்கு கடும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அவர் மரணம் அடைந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. இதைக் கேட்டு பலரும் அதிர்ச்சியடைந்தனர். அதனைத்தொடர்ந்து தான் உயிரிழக்கவில்லை சமாதி நிலையில் உள்ளதாகவும், திரும்ப வந்துவிட்டேன் எனவும் அவர் கைப்பட எழுதி வெளியான கடிதம் வைரலாகி இருந்தது. இந்நிலையில் திருவண்ணாமலையில் உள்ள நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதாக அப்பெண்ணின் தந்தை புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார் நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நள்ளிரவில் இந்த தேடுதல் வேட்டை நடைபெற்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)