Skip to main content

கனமழை பாதிப்பு; சீர்காழியில் பள்ளிகளுக்கு விடுமுறை

Published on 16/11/2022 | Edited on 16/11/2022

 

Impact of heavy rain; Holidays for schools in seerkazhi

 

அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு முன் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 17ம் தேதி வரை மழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

 

இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் 19ம் தேதி வரை மிதமான மழையும் 20ம் தேதி கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 

கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் அங்கிருக்கும் குடியிருப்புப் பகுதிகள், விளை நிலங்கள் போன்ற அனைத்து இடங்களும் நீரில் மூழ்கி உள்ளது. முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தொடர்ந்து அங்கு சென்று மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியும் நிவாரண உதவிகளை வழங்கிய வண்னம் உள்ளனர். 

 

மேலும் அப்பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.

 

இந்நிலையில் கனமழையால் பாதிக்கப்பட்ட சீர்காழி தாலுகாவில் பள்ளிகளுக்கு நாளை (17/12/2022) விடுமுறை விடப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chance of rain in 4 districts

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால் தண்ணீரின்றி வனப்பகுதிகள் வறண்டு இருப்பதால் வனவிலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிக்கு தண்ணீர் தேடி வரும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கிறது. குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலையின் வனப்பகுதிகளில் கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

வெயிலின் கொடுமையில் மக்கள் அல்லல்படும் நிலையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (15.04.2024) காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

‘எங்களை விவசாயம் செய்யவிடுங்கள்’ - போராடும் பொதுமக்கள்!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
The public protest against to be set up power plant in mayiladuthurai

சீர்காழி அருகே நெப்பத்தூர் கிராமத்தில் பவர் பிளான்ட் அமைக்கப்போவதை கண்டித்து போராட்டத்திற்கு ஆயத்தமாகும் பொதுமக்களிடம் வட்டாட்சியர் அமைதிப் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த நெப்பத்தூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில், மெகா கிரைடு வோட்டர்ஸ் என்ற பவர் பிளான்ட் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு, மேற்கொண்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பவர் பிளான்ட், தங்களது கிராமத்தில் அமைந்தால் தங்களின் விவசாயமும், வாழ்வாதாரமும் பறிபோகும் என எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விவகாரத்தின் வீரியம் அறிந்த சீர்காழி வட்டாட்சியர் இளங்கோவன் தலைமையில் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் மற்றும் பவர் பிளான்ட் நிர்வாகிகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அப்போது பொதுமக்கள் கூறுகையில், “இந்த பவர் பிளான்ட் அமைய உள்ள இடம் முழுவதும் விவசாயம் நடைபெறக்கூடிய இடமாக உள்ளது. மேலும், பவர் பிளாண்ட் அமைப்பது தொடர்பாக கிராமத்திலும், மற்ற எந்த துறையிலும் அனுமதி பெறவில்லை. எனவே, இந்த பகுதியை ஆய்வு செய்த பிறகு அனுமதி வழங்க வேண்டும். அதன் பிறகு, பவர் பிளான் அனுமதி வழங்கும் பட்சத்தில் இது தொடர்பான நன்மை, தீமைகளை கிராம பொதுமக்களிடம் துறை சார்ந்த அலுவலர்கள் விளக்கி கூற வேண்டும்” என கிராம மக்கள் சார்பாக தெரிவிக்கப்பட்டது. 

The public protest against to be set up power plant in mayiladuthurai

அதன் பின்னர், மக்களின் கோரிக்கைகளை ஏற்று, பவர் பிளான்ட் அமைப்பது தொடர்பாக அனுமதி பெற வேண்டிய அனைத்து துறைகளிடமிருந்தும் அனுமதி பெற்று, பிறகு கிராம ஊராட்சியில் அனுமதி பெற்று தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவடைந்த பின்பு சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என வட்டாட்சியர் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.