Skip to main content

மரிக்காத மனிதநேயம்; மனநிலை பாதித்து திரிந்தவரை மனிதனாக்கிய அரசு மருத்துவர்

Published on 02/06/2023 | Edited on 02/06/2023

 

 Immortal humanity; the government doctor who humanized the mentally ill

 

அழுக்கு தேகம், கந்தலாடை, பரட்டைத் தலை என ஆதரவற்றவர்கள் பராரியாய் திரிவதையும் மனிதன் கடந்து வந்ததுண்டு. ஆனாலும் அவர்களில் ஒரு சிலர் மனிதநேயத்துடன் ஆதரவற்றவர்களை அணுகிப் பராமரிப்பது என்பது விரல்விட்டு எண்ணக்கூடிய சம்பவங்களே. அவர்களால் தான் மனிதநேயம் என்ற சொல் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

 

தென்காசி மாவட்டத்தின் செங்கோட்டை பஸ் நிலையப் பகுதிகளில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மனநிலை பாதிக்கப்பட்டு நீண்ட தாடி, தலைமுடியுடன் அழுக்கேறிய கிழிந்த ஆடையுடன் மெலிந்த தேகமாய் பரிதாபமாய் அலைந்து திரிந்து கொண்டிருந்தார். நேற்றைய தினம் அந்த வழியாகச் சென்ற செங்கோட்டை அரசு மருத்துவமனையின் தலைமை டாக்டர் ராஜேஷ் கண்ணன், அந்த வாலிபரைப் பார்த்து பரிதாபப்பட்டவர், கண்கள் கசிய வாஞ்சையுடன் அந்த வாலிபரிடம் பேசி அவரைத் தன்னோடு செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

 

அங்கு அவருக்கு வேண்டிய சுகாதார வசதிகளைச் செய்தவர், அவரது தாடி, தலைமுடிகளைச் சீர் செய்து புத்தாடைகள் அணிவித்து மருத்துவ சிகிச்சைகளை அளித்து வாலிபரின் கெட்டப்பையும் மாற்றி சராசரி மனிதனாக்கிப் பராமரித்து வருகிறார். அங்த வாலிபரைப் பற்றிய விபரம் தெரியவில்லை. தெரிந்தவர்கள் செங்கோட்டை அரசு தலைமை மருத்துவரையோ அல்லது செங்கோட்டை காவல் நிலையத்தையோ தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்கிறார்கள்.

 

மனநோயால் பாதிக்கப்பட்ட நோயாளியான ஒருவரை மனிதாபிமானத்துடன் மீட்டு அவரை மனிதனாக்கியதுடன் அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்து வரும் மனிதநேய அரசு மருத்துவர் ராஜேஷ் கண்ணனை பொதுமக்கள் கொண்டாடுகின்றனர்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

மம்தா பானர்ஜி உடல்நிலை குறித்து மருத்துவர் விளக்கம்!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Doctor explains Mamata Banerjee's health

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகள் வேட்பாளர்களையும் அறிவித்து வருகின்றன.

அந்த வகையில் மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் 42 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அம்மாநில முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கடந்த 10 ஆம் தேதி (10.03.2024) வெளியிட்டு 42 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்தார். இதனையடுத்து மம்தா பானர்ஜி தீவிர தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த சூழலில் மம்தா பானர்ஜிக்கு நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். நெற்றியில் இருந்து முகத்தின் வழியாக ரத்தம் வழியும் புகைப்படத்தை திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டது.

Doctor explains Mamata Banerjee's health

அந்த பதிவில், “மம்தா பானர்ஜிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தயவுசெய்து அவரை உங்களின் பிரார்த்தனை மூலம் நல்ல நிலைக்கு வர வையுங்கள்” எனப் பதிவிடப்பட்டிருந்தது. மம்தா பானர்ஜி கொல்கத்தா வூட்பர்ன் பிளாக்கில் உள்ள எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனையின் விபத்து மற்றும் அவரச சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மேலும் மம்தா பானர்ஜிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பலவேறு தலைவர்களும் தங்களது ஆறுதலை தெரிவித்துள்ளனர்.

Doctor explains Mamata Banerjee's health!

இந்நிலையில் எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனையின் இயக்குநரும், மருத்துவருமான மணிமோய் பந்தோபாத்யாய் கூறும்போது, “மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று (14.03.2024) இரவு 07:30 மணியளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னால் இருந்து ஏற்பட்ட அதிர்வு காரணமாக வீட்டில் அவர் விழுந்த தடயம் உள்ளது. இதனால் அவரது பெருமூளை அதிர்ச்சி ஏற்பட்டு நெற்றியிலும் மூக்கிலும் கூர்மையான வெட்டு காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. ஆரம்பத்தில் முதலில் மூளை மற்றும் நரம்பியல், மருந்தவியல் மற்றும் இதயவியல் ஆகிய துறையின் தலைமை மருத்துவர்கள் குழுவினரை கொண்டு, உடல் நிலை குறித்து பரிசோதித்து உறுதிபடுத்தப்பட்டது.

Doctor explains Mamata Banerjee's health!
மருத்துவர் மணிமோய் பந்தோபாத்யாய்

நெற்றியில் மூன்று தையல்கள் போடப்பட்டன. ஈ.சி.ஜி., சி.டி. ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மம்தா பானர்ஜி தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அவர் வீட்டிற்கு செல்ல விரும்பினார். இதனால் அவரை தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருவதுடன் மருத்துவர் குழுவின் ஆலோசனையின்படி தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படும். அவருக்கு நாளை (15.03.2024) மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதற்கேற்ப சிகிச்சை அளிப்பது குறித்து முடிவு செய்யப்படும்” எனத் தெரிவித்தார். 

Next Story

காவலர்கள் தாக்குதலால் டிரைவர் மரணம்? மக்களின் போராட்டத்தால் தென்காசியில் பதற்றம்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
struggle of people claiming that driver was incident by policemen in Tenkasi
வேன் டிரைவர் முருகன்

தென்காசி மாவட்டத்தின் சங்கரன்கோவில் அருகேயுள்ள வடக்குபுதூரைச் சேர்ந்த வேன்டிரைவர் முருகன் கடந்த மார்ச் 8 அன்று (மஹாசிவராத்திரி) அச்சம்பட்டியிலிருந்து பொது மக்களை வேனில் ஏற்றிக் கொண்டு பஞ்சஸ்தலங்கள் செல்வதற்காக சங்கரன்கோவில் டவுண் பஜார் வழியாக வந்திருக்கிறார். அதுசமயம் எதிர்பாராத விதமாக வேன் முன்னே சென்ற ஆட்டோ ஒன்றில் மோதியதால், வேன்டிரைவர் முருகனும் ஆட்டோ ஓட்டுனரும் தர்க்கத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதனால் மெயின் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நகர முடியாமல் நீண்ட தொலைவிற்கு ப்ளாக் ஆகியது போக்குவரத்து நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனால் அந்தப் பகுதியில் பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் சம்பவ இடம் வந்தவர்கள் முருகனை தாக்கியுள்ளதாகத் தெரிகிறது. இதனால் மயக்கமடைந்த முருகனை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றிருக்கின்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். இதையறிந்த முருகனின் உறவினர்கள் சங்கரன்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இரவு முழுக்க சாலை மறியலில் ஈடுபட்டனர்.

struggle of people claiming that driver was incident by policemen in Tenkasi

போலீசார் தாக்கியதால்தான் முருகன் இறந்ததாகக் கூறி பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட அவரது உடலை வாங்க மறுத்துப் போராட்டம் நடத்திவருகின்றனர். சம்பவத்திற்கு காரணமான காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முருகனை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்திற்கும் உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும். அது வரை உடலை வாங்கப் போவதில்லை என்று கூறி அவரது உறவினர்கள் வடக்குபுதூர் கிராமத்தில் 6வது நாளாகப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். உடன் மார்க்சிஸ்ட் கட்சியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அறிவிக்கப்பட்டதன்படி மார்ச் 13 அன்று சங்கரன்கோவில் நகரின் தேரடித் திடலில் ஆர்ப்பாட்டம் நடத்துகிற வகையில் காலை 10.30 மணியளவில் நகரைச் சுற்றியுள்ள வடக்குபுதூர், காந்திநகர், அச்சம்பட்டி, புளியம்பட்டி நெடுங்குளம், அழகாபுரி, சீவலராயநேந்தல், அழகுநாச்சியார்புரம், அழகநேரி என 32 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து பங்கேற்றனர். அதுசமயம் ஒரு பகுதியினர் நகரின் முக்கியத் தடுப்புகள், தடைகளைப் போட்டு வாகனங்களைத் தடுத்தும் மறியலில் ஈடுபட்டனர். பதற்றம் காரணமாக பாதுகாப்பு பணிக்கென்று போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் நகரம் இறுக்கமானது. இதனிடையே சங்கரன்கோவில் அருகேயுள்ள மருதப்பபுரம் கிராமத்தில் எதிர்பாராத வகையில் வைக்கோல் படப்பு தீப்பிடித்து எரிந்ததால் அதனை அணைக்கிற வகையில் அந்த வழியாக வந்த சங்கரன்கோவிலின் தீயணைப்பு நிலைய வாகனத்தை நகருக்குள் விடாமல் ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுக்க தீயணைப்பு வாகனம் வேறு வழியாகச் சென்றது.

struggle of people claiming that driver was incident by policemen in Tenkasi

நேரம் செல்லச் செல்ல வேறு சில பகுதிகளிலிருந்தெல்லாம் மக்கள் பிரதானச் சாலையை நோக்கி திரண்டு வர அது சமயம் அந்தப் பகுதியிலிருந்த கடைகளை அடைக்கச் சொல்லி கற்களை வீசவே, பதற்றமடைந்த வியாபாரிகள் பீதியில் கடைகளை அடைத்தனர்.  ஆபத்தான நிலையை அறிந்த தென்காசி மாவட்ட எஸ்.பி.யான சுரேஷ்குமார் மறியல் நடந்த பழைய பேருந்து நிலைய பகுதிக்கு வந்தவர் அவர்களை சமாதானப் படுத்தியிருக்கிறார். ஆனாலும் ஒரு பகுதியினர் அவரைச் சூழ்ந்து கொண்டவர்கள் அரைமணி நேரத்திற்கும் மேலாக அங்கிருந்து செல்ல விடாமல் முற்றுகையிட்டனர்.

struggle of people claiming that driver was incident by policemen in Tenkasi

தொடர்ந்து அவர்களிடம் பேசிய எஸ்.பி, முருகன் இறந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டதாக கூறியவர் பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். மறியல், ஆர்ப்பாட்டம் என நகரம் துண்டிக்கப்பட, சுற்றுப்பட்டுக் கிராமங்களிலோ, பதற்றமும் பரபரப்பும் இறங்கியபாடில்லை.