சட்டவிரோத மது விற்பனையை தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, அறச்சலூர், ஆசனூர், சத்தியமங்கலம் மற்றும் சித்தோடு போலீசார் தங்களது காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் நேற்று தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அரசு மதுபானத்தை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்த அறச்சலூர், குறிஞ்சி நகரை சேர்ந்த விஜயன் (36), கோவை, சூலூர், தெற்கு தேர் வீதியைச் சேர்ந்த யுவராஜ் (35), சத்தியமங்கலம், திரு நகர் காலனியை சேர்ந்த சுரேஷ் (45), சித்தோடு நால்ரோட்டை சேர்ந்த காளிமுத்து (48) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 17 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.