Skip to main content

"இளையராஜா பின்வாங்க மாட்டார்"- கங்கை அமரன் பேட்டி!

Published on 17/04/2022 | Edited on 17/04/2022

 

"Ilayaraja will not back down" - Gangai Amaran interview!

 

ப்ளூ கிராப் டிஜிட்டல் பவுண்டேசன் நிறுவனம் 'மோடியும் அம்பேத்கரும்' என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தப் புத்தகத்தில் இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார். அது தற்போது சமூகவலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. 

 

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள முன்னுரையில், "பிரதமர் நரேந்திர மோடியின் "மேக் இன் இந்தியா" திட்டம் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது. நாட்டில் சாலைகள், ரயில் போக்குவரத்து, மெட்ரோ ரயில், விரைவு எக்ஸ்பிரஸ் சாலைகள் போன்றவை உலகத் தரத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. சமூக நீதியைப் பொறுத்தவரை, பல்வேறு சட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோடி செயல்படுத்தி இருக்கிறார். முத்தலாக் சட்டம், 'பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் - பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்' என்ற திட்டமும், பெண்களின் திருமண வயதை உயர்த்த முடிவெடுத்ததும் பெண் சமுதாயத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும். இதுபோன்ற நரேந்திர மோடியின் ஆட்சியின் செயல்பாடுகளைக் கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார். அம்பேத்கரும், நரேந்திர மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

இளையராஜாவின் இந்த முன்னுரை தற்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.  பிரதமர் நரேந்திர மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிடுவது தவறானது என்று கூறி சமூக வலைதளங்களில் இளையராஜாவின் பேச்சுக்குப் பலரும் கண்டனங்களைப் பதிவிட்டு வருகின்றனர். இதே போன்ற இளையராஜாவின் கருத்திற்கு ஆதரவாகவும் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.

 

இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த இசையமைப்பாளர் இளையராஜாவின் சகோதரர் கங்கைஅமரன், "அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டு பேசிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது என இளையராஜா கூறினார். தனக்கு எதிரான விமர்சனங்களை ஏற்றுக் கொள்வதாகவும், என்னிடம் இளையராஜா கூறினார். மற்றவர்கள் எப்படி கருத்துக் கூறுகிறார்களோ, அதேபோல் தான் கருத்தைக் கூறினேன் என்றார் இளையராஜா. தான் பதவியை வாங்குவதற்காக மோடியை புகழவில்லை;  தான் கட்சிக்காரரும் இல்லை என்றார் இளையராஜா. அம்பேத்கரையும் பிடிக்கும், மோடியையும் பிடிக்கும்; அதனால் ஒப்பிட்டு பேசினேன் என்றார் இளையராஜா." இவ்வாறு கங்கைஅமரன் கூறினார்.  

 

சார்ந்த செய்திகள்

Next Story

“அப்போதான் இளையராசான்னு பேரை கேக்கிறேன்” - நினைவலைகளைப் பகிர்ந்த சேரன்

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Cheran shared his memories about ilayaraja

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. கனெக்ட் மீடியா, பி.கே. ப்ரைம் புரடக்‌ஷன் மற்றும் மெர்குரி மூவிஸ் என மூன்று நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தில், இளையராஜா கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். இளையராஜா எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. அறிவிப்பு போஸ்டர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

ராக்கி, சாணிக் காயிதம், கேப்டன் மில்லர் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கும் இப்படத்தின் தொடக்க விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில், கமல்ஹாசன், தனுஷ், இளையராஜா, பாரதிராஜா, வெற்றிமாறன், அருண் மாதேஷ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இளையராஜா கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கும் தனுஷ் புகைப்படம் கொண்ட போஸ்டரை கமல்ஹாசன் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார். 

இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்குவதற்கு பலரும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் சேரன், தன்னுடைய நினைவலைகளைப் பகிரிந்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது, “சின்ன வயசுல ஊர்ல நாடகம் போட்டா முதல்ல போடுற பாட்டு மச்சானை பாத்தீங்களா தான்.. படம் அன்னக்கிளி. அப்போதான் இளையராசான்னு பேரை கேக்கிறேன். புதுப்பய பாட்டு போட்டிருக்கான்னு எங்க ஊரு பெரியவங்க சொல்றாங்க.

அப்பறம் கறுப்பு வெள்ளைல போட்டோ பாக்குறேன். ஒருத்தர் மீசை இல்லாம ஹிப்பி ஸ்டைல், பாபி காலர் சட்டைல அழகா சிரிக்கிறார். அவர் மேல பிரியம் வருது. (அவர்கூட பின்னாளில் பணிபுரிய போறேன்னு அப்போ தெரியாது). எனக்கு பிடிச்ச சிவாஜிக்கு பாட்டு போடுறாரு. தியாகம் படம். தேன் மல்லிப்பூவேன்னு... படம் வெறித்தனமா ஓடுது. ராசா பாட்டுத்தான் காரணம்னு சொல்றாக. அந்த ராசா அப்போ எப்படிலாம் இருந்திருப்பார்னு 2025ல பாக்க போறோம். சினிமா மட்டுமே பார்வையாளனுக்கு நினைக்க முடியாத ஆச்சரியங்களை தரும். இளையராஜா அவர்களின் வாழ்க்கை சிறப்பை படமாக்க முயன்றிருக்கும் தனுஷ் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள். ஒரு சாமானியனின் வெற்றியாய் வளரட்டும். இளையராஜா வரலாறு...” என்று பதிவிட்டுள்ளார். 

Next Story

“பவதாரிணி பெயரில் பணம் சுருட்டிருக்காங்க” - கங்கை அமரன் பகீர் குற்றச்சாட்டு

Published on 19/02/2024 | Edited on 19/02/2024
gangai amaranGanga Amaran accuses dhina saying embezzled the money with the signature of Bhavadharani

தென்னிந்திய திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத் தேர்தல், நேற்று நடைபெற்ற நிலையில் தலைவர் பதவிக்கு தினாவை எதிர்த்து போட்டியிட்ட சபேஷ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனிடையே கங்கை அமரன், தீனா குறித்து பகீர் குற்றச்சாட்டு வைத்துள்ளார். அது தற்போது இசைத்துறையில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது,  “எங்க வீட்டில் ஒரு துக்க நிகழ்வு. அதனால் இளையாராஜாவால் வரமுடியவில்லை. அவர் சார்பாக நான் வந்திருக்கிறேன். இந்த யூனியன் ஆரம்பிக்கப்பட்ட போது விதியின்படி, ஒருவருக்கு 2 வருட பதவி, அதை மேலும் 2 இரண்டு வருடம் நீட்டித்துக் கொள்ளலாம். ஆனால் 4 முறை தலைவராக இருந்த தினா அவரது அதிகாரத்தை பயன்படுத்தி அடுத்த 4 வருஷத்துக்கும் தலைவராக வேண்டும் என அடம்பிடிக்கிறார். 

அது போக யூனியனில் நடக்கக்கூடாத பல சம்பவங்கள் நடந்திருக்கிறது. கொரோனா சமயத்தில் பலருக்கு உதவி பண்ணுவதாக அவர்கள் பணம் வாங்கியிருக்கிறார்கள். அதில் அவர்களாக பணம் கோரும் கடிதத்தை தயார் செய்துள்ளனர். இதில் இறந்து போன பவதாரிணியின் கையெழுத்து போட்டுக் கூட பணம் எடுத்துள்ளார்கள். ஏறத்தாழ ரூ.80 லட்சத்துக்கும் மேல் சுருட்டியுள்ளனர். அந்த கணக்கெல்லாம் எங்கு தெரிந்துவிடுமோ என்பதற்காக மீண்டும் தலைவராக வர தினா முயற்சிக்கிறார்” என்றார். 

மேலும் இளையாராஜா கூறியும் தினா மறுத்துவிட்டதாக சொன்ன கங்கை அமரன், “இளையராஜா தினாவிடம் ஒரு ஆளுக்கு 4 வருஷம் தான் பதவி, நீ பண்றது சரியில்லை... என சொன்ன போது, அந்தாளு சும்மா உக்காந்து கத்திக்கிட்டு இருப்பான்... என பேசினார்” என்றார். மேலும் இளையராஜா பேசிய ஆடியோவையும் வெளியிட்டார்.