/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2_1260.jpg)
கடந்த ஆண்டு ஜூலை மாதம் மாநிலங்களவை நியமன உறுப்பினராக இசையமைப்பாளர் இளையராஜாநியமிக்கப்பட்டார். அவருடன் சேர்த்து தடகள வீராங்கனைபி.டி. உஷா, பிரபல இயக்குநர் ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத், வீரேந்திர ஹெக்டே ஆகியோரும் நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் 7ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை 13 நாட்கள் நடந்து முடிந்தது.
இந்நிலையில் நடந்து முடிந்த கூட்டத்தொடரில் நியமன எம்.பி இளையராஜா ஒரு நாள்கூட பங்கேற்கவில்லை எனத்தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நியமன எம்.பி.க்களில் தடகள வீராங்கனை பி.டி. உஷா 13 நாட்கள் குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்றுஒரு விவாதத்தில் கலந்துகொண்டுள்ளார் என்றும், வீரேந்திர ஹெக்டே 5 நாட்களும், விஜயேந்திர பிரசாத் 2 நாட்களும்பங்கேற்றுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
மாநிலங்களவை நியமன எம்.பியாக இளையராஜா பதவியேற்பதற்கு முன்பு, பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு எழுதியிருந்தார். இது பெரும் சர்ச்சையான நிலையில், தற்போது கூட்டத்தொடரில் ஒரு நாள்கூட பங்கேற்காதது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)