சமீபத்தில் இயக்குனர் பா.ராஞ்சித் ஒரு மேடையில் பேசும்போது, ''மன்னர் ராஜராஜசோழன்தான் மக்களிடம் உள்ள நிலத்தை அபகரித்தவர். அவரது ஆட்சியிலிருந்துதான் ஜாதி பிளவு கட்டமைக்கப்பட்டது. தேவதாசி முறை அவர்கள் ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டது. தற்போது ராஜராஜ சோழன் எங்களின் ஜாதிக்காரர் என்று 8 ஜாதிக்காரர்கள் சண்டையிட்டு கொள்கிறார்கள். ராஜராஜ சோழன் ஆட்சிதான் இருப்பதிலேயே இருண்ட ஆட்சி என்று நான் சொல்வேன்" என்றார்.இயக்குனர் பா.ரஞ்சித் பேசியது தமிழகம் முழுவதும் பெரும் விவாதத்தை கிளப்பியது.

pa.ranjith

Advertisment

இந்த கருத்துக்கு ஒரு சில அமைப்புகள் எதிர்ப்பும்,ஒரு சில அமைப்புகள் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில் ராஜராஜ சோழனை இழிவு படுத்தி பேசியதாக இயக்குநர் ப.ரஞ்சித் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என்று சொல்லப்படுகிறது.இந்த நிலையில் பா.ரஞ்சித் இந்த வழக்கு குறித்து பேசி வருவதாகவும்,முன் ஜாமீன் கோரலாம் என்றும் கூறி வருகின்றனர்.