Skip to main content

அரசியலை நோக்கிய மக்கள் பாதையின் பயணமா, சகாயத்தின் விருப்ப ஓய்வு!

Published on 31/10/2020 | Edited on 31/10/2020

 

IAS Officer Sagayam applied VRS

 

 

தமிழகத்தில் சகாயம் என்றால் தெரியாதவர்கள் எவரும் இருக்க முடியாது. தன்னுடைய மாவட்ட ஆட்சியாளர் பணியில் நேர்மையாக அணுகு முறையாலும் மாநில முழுதும் பரவலாக பேசப்பட்டவர். தனது சொத்துக் கணக்குகளை வெளியிட்ட முதல் இ.ஆ.ப அதிகாரியாவார். 

 

2016-ல் தமிழ் மக்களின் விருப்பத்துடன் முதல்வர் வேட்பாளராக தேர்தலில் போட்டியிடுவார் என சமூக வலைதளங்களில் தகவல்கள் பரப்பட்டன. இப்படி தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள இவர், தற்போது தமிழக அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற சகாயம் ஐ.ஏ.எஸ். விண்ணப்பித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து, தமிழ் கையெழுத்து, விவசாயம், என சமூக அக்கறைக்கொண்ட இவர், கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அறிவியல் நகர துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து வருகிறார். இவரது பணிக்காலம் இன்னும் 3 ஆண்டுகள் எஞ்சியுள்ள நிலையில் விருப்ப ஓய்வு கோரியுள்ளார். 

 

இவரின் நேர்மையைப் பாராட்டி சில மேடைகளில் முக்கிய பிரமுகர்களே உங்களைப் போன்றவர்கள் தான் அரசியலுக்கு வர வேண்டும். என கோரிக்கைகள் முன்வைத்துள்ளனர்.

 

அதேநேரத்தில் சகாயம் அவர்களை நோக்கி இளைஞர்கள் வருகையும் தொடங்கி அவர்களும் அதே கோரிக்கைய முன் வைத்து, அடுத்தாண்டு தேர்தல் வருவதால் அவர் அரசியலுக்கு வரவேண்டும் என இளைஞர்கள் சமூக வலைதளங்களில் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த அதிரடி நடவடிக்கை அரசியலை நோக்கிய மக்கள் பாதையின் பயணமா எனும் விவாதமும் சமூகவலைதளங்களில் பரவிவருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சகாயம் உடல்நிலை நன்றாக உள்ளது' - மருத்துவமனை தகவல்!

Published on 13/04/2021 | Edited on 13/04/2021

 

sagayam ias coronavirus positive chennai government hospital

 

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக அரசு மாநிலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. மேலும், பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்; சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்; கைகளை அடிக்கடி சோப்பு (அல்லது) கிருமிநாசினியைக் கொண்டு கழுவ வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி வருகிறது.

 

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சியின் முக்கியத் தலைவர்கள், வேட்பாளர்கள் சிலர் கரோனா நோய்த் தோற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இந்த நிலையில், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான சகாயம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்ற நிலையில் 'சகாயம் அரசியல் பேரவை' என்ற அமைப்பை தொடங்கி அரசியலில் களமிறங்கினார். இந்த அமைப்பு தமிழக சட்டமன்றத் தேர்தலில் 20 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டது. இருப்பினும் சகாயம் தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால், வேட்பாளர்களை ஆதரித்துத் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

 

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சகாயத்திற்கு செய்யப்பட்ட கரோனா மருத்துவப் பரிசோதனையில் நோய்த் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து 8- வது நாளாக சிகிச்சை அளித்து வருகின்றனர். 

 

சகாயம் உடல்நிலை குறித்து தெரிவித்துள்ள மருத்துவமனையின் டீன், "கரோனாவால் பாதிக்கப்பட்ட சகாயம் ஐ.ஏ.எஸ். உடல்நிலை நன்றாக உள்ளது. மீண்டும் பரிசோதனை செய்து கரோனா இல்லை எனத் தெரியவந்தால் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

 

Next Story

"தமிழகத்தில் தூய்மையான அரசியல்வாதிகள் இல்லை"- சகாயம் வேதனை!

Published on 14/02/2021 | Edited on 14/02/2021

 

sagayam ias pressmeet at chennai

 

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மக்கள் பாதை அமைப்பின் தலைவரும், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சகாயம், "புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பதே என்னுடைய நிலைப்பாடு. மத்திய அரசின் வேளாண் சட்டத்தில் நம்பிக்கை இல்லாததே விவசாயிகள் போராட காரணம். தேர்தல் நேரத்தில் தவறிழைக்கும் அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் தூய்மையான அரசியல்வாதிகள் இல்லை. நல்லவர்கள் யார் என்பதை அடையாளம் கண்டு மக்கள் பிரதிநிதிகளை இளைஞர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்" என்றார்.