Skip to main content

''எஸ்.பி.பிக்காக முயற்சி செய்வேன்" - கங்கை அமரன் பேட்டி!

Published on 26/09/2020 | Edited on 26/09/2020

 

'I will try for SPB'-Gangai Amaran

 

மறைந்த பாடகர் எஸ்.பி.பிக்கு தற்போது வரை அவரது ரசிகர்களும், மக்களும், பிரபலங்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அவருக்கு 'பாரத ரத்னா' விருது வழங்குவதற்கு நிச்சயமாக நான் முயற்சி செய்வேன் என இசையமைப்பாளரும், இயக்குனருமான கங்கை அமரன் தெரிவித்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பாரத ரத்னா விருது குழுவில் நானும் ஒரு உறுப்பினராக இருப்பதால் மறைந்த பாடகர் எஸ்.பி.பிக்கு புகழ் சேர்க்கும் விதமாக அவருக்கு 'பாரத ரத்னா' விருது வழங்கப்படுவதற்கான முயற்சிகளை எடுப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பவதாரிணி பெயரில் பணம் சுருட்டிருக்காங்க” - கங்கை அமரன் பகீர் குற்றச்சாட்டு

Published on 19/02/2024 | Edited on 19/02/2024
gangai amaranGanga Amaran accuses dhina saying embezzled the money with the signature of Bhavadharani

தென்னிந்திய திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத் தேர்தல், நேற்று நடைபெற்ற நிலையில் தலைவர் பதவிக்கு தினாவை எதிர்த்து போட்டியிட்ட சபேஷ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனிடையே கங்கை அமரன், தீனா குறித்து பகீர் குற்றச்சாட்டு வைத்துள்ளார். அது தற்போது இசைத்துறையில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது,  “எங்க வீட்டில் ஒரு துக்க நிகழ்வு. அதனால் இளையாராஜாவால் வரமுடியவில்லை. அவர் சார்பாக நான் வந்திருக்கிறேன். இந்த யூனியன் ஆரம்பிக்கப்பட்ட போது விதியின்படி, ஒருவருக்கு 2 வருட பதவி, அதை மேலும் 2 இரண்டு வருடம் நீட்டித்துக் கொள்ளலாம். ஆனால் 4 முறை தலைவராக இருந்த தினா அவரது அதிகாரத்தை பயன்படுத்தி அடுத்த 4 வருஷத்துக்கும் தலைவராக வேண்டும் என அடம்பிடிக்கிறார். 

அது போக யூனியனில் நடக்கக்கூடாத பல சம்பவங்கள் நடந்திருக்கிறது. கொரோனா சமயத்தில் பலருக்கு உதவி பண்ணுவதாக அவர்கள் பணம் வாங்கியிருக்கிறார்கள். அதில் அவர்களாக பணம் கோரும் கடிதத்தை தயார் செய்துள்ளனர். இதில் இறந்து போன பவதாரிணியின் கையெழுத்து போட்டுக் கூட பணம் எடுத்துள்ளார்கள். ஏறத்தாழ ரூ.80 லட்சத்துக்கும் மேல் சுருட்டியுள்ளனர். அந்த கணக்கெல்லாம் எங்கு தெரிந்துவிடுமோ என்பதற்காக மீண்டும் தலைவராக வர தினா முயற்சிக்கிறார்” என்றார். 

மேலும் இளையாராஜா கூறியும் தினா மறுத்துவிட்டதாக சொன்ன கங்கை அமரன், “இளையராஜா தினாவிடம் ஒரு ஆளுக்கு 4 வருஷம் தான் பதவி, நீ பண்றது சரியில்லை... என சொன்ன போது, அந்தாளு சும்மா உக்காந்து கத்திக்கிட்டு இருப்பான்... என பேசினார்” என்றார். மேலும் இளையராஜா பேசிய ஆடியோவையும் வெளியிட்டார்.

Next Story

தாத்தாவுக்கு பாரத ரத்னா விருது; அன்றே இந்தியா கூட்டணியிலிருந்து விலகிய பேரன்!

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
saran singh who left the alliance with India after Bharat Ratna award to his grandfather

இந்தியாவில் சிறந்த குடிமக்களுக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு வருகிறது. அதாவது அரசியல், கலை, இலக்கியம், அறிவியல், விஞ்ஞானம் உள்ளிட்ட துறைகளில் சாதனை படைப்பவர்களுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் முன்னாள் பிரதமர்கள் சரண் சிங், நரசிம்மராவ் மற்றும் இந்தியாவின் ‘பசுமைப் புரட்சியின் தந்தை’ எம்.எஸ். சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “இந்தியாவின் முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் கடந்த 1991 முதல் 1996 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் 9 ஆவது பிரதமராகப் பதவி வகித்தவர் ஆவார். சிறந்த அறிஞராகவும், அரசியல்வாதியாகவும் நரசிம்மராவ் பல்வேறு பதவிகளில் பணிபுரிந்தவர். இந்தியா பொருளாதார ரீதியாக முன்னேற நரசிம்மராவின் தொலைநோக்கு பார்வை உதவியது. வெளியுறவுக் கொள்கை உள்ளிட்டவற்றில் நரசிம்மராவ் ஆற்றிய பங்களிப்புகள் நாட்டை வழி நடத்தியது. விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த பணிகளில் மகத்தான பங்களிப்பை அளித்தவர் எம்.எஸ். சுவாமிநாதன் ஆவார். இவர் சவாலான நேரத்தில் இந்தியா விவசாயத்தில் தன்னிறைவை அடைய உதவியதில் சுவாமிநாதன் முக்கிய பங்கு வகித்தவர் ஆவார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக பீகார் முன்னாள் முதல்வருமான கர்பூரி தாக்கூருக்கும், பாஜக மூத்த தலைவரும், இந்தியாவின் முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே. அத்வானிக்கும் பாரத ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில், சரண் சிங்கின் பேரனும் ஆர்.எல்.டி கட்சித் தலைவருமான ஜெயந்த் சவுத்ரி இன்று (09-02-24) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “முந்தைய அரசுகளால் இன்றுவரை செய்ய முடியாததை பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையால் நிறைவேற்றி உள்ளார். எளிய மக்களை ஊக்குவிக்கும் பிரதமர் மோடியின் அரசுக்கு மீண்டும் ஒருமுறை எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாள் எனக்கு மிகப்பெரிய நாள்; மிகவும் உணர்ச்சிகரமான நாள். குடியரசு தலைவர், மத்திய அரசு, பிரதமர் மோடி ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.

இதையடுத்து, ‘நீங்கள் பாஜகவுடன் கூட்டணி அமைக்க உள்ளீர்களா’ என செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் அளித்த அவர், “கூட்டணி வாய்ப்பை என்னால் எவ்வாறு மறுக்க முடியும்? அதே நேரத்தில் தொகுதிகள் குறித்தோ, வாக்குகள் குறித்தோ பேசுவதற்கான நாள் அல்ல இது. மக்களின் உணர்வுகளையும் நாட்டின் இயல்பையும் பிரதமர் மோடி உணர்ந்து இருக்கிறார் என்பதை அவர் தனது இந்த முடிவின் மூலம் உணர்ந்திருக்கிறார்” என்று கூறி பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ளதை உறுதி செய்துள்ளார். 

உத்தரப் பிரதேசத்தில், இந்தியா கூட்டணியில் ராஷ்டிரிய லோக் தளமும், சமாஜ்வாதி கட்சியும் இணைந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று உத்தரப் பிரதேச அரசியலில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இது இந்தியா கூட்டணிக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது.