/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Depr3RmVQAAXE0s_0.jpg)
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜா இன்று தனது 75வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ள குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், இளையராஜாவுக்கு பத்மவிபூஷண் விருது வழங்கிய போது எடுத்த புகைப்படத்தையும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மேலும் அதில், இந்தியாவின் இன்னிசைத் துடிப்பைத் தீர்மானிக்கும், ஒப்பற்ற கலைஞர், இசை மாமேதை, தன்னிகரில்லா இளையராஜாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். இவ்வாண்டுத் தொடக்கத்தில், அன்னாருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கியதை யான் பெற்ற பெரும்பேறாகக் கருதுகிறேன் என குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)