Skip to main content

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி ரத்து! -மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்

Published on 20/01/2020 | Edited on 20/01/2020

தமிழக விவசாய நிலங்களை பாழ்படுத்தும் மத்திய அரசின் ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் தமிழகத்தில் உயிர்ப்புடன் இருக்கிறது. ஹைட்ரோகார்பன் திட்டங்களை தமிழகத்தில் அமல்படுத்தும் போது தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறையின் அனுமதியை பெற வேண்டும் என்கிற சட்டவிதியால் திட்டத்தை நேரடியாக நடைமுறைக்கு கொண்டு வர மத்திய பாஜக அரசு பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வந்தது. இந்த நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும் என்கிற விதியை ரத்து செய்திருக்கிறது மத்திய அரசு. இதனை தமிழக அரசியல் கட்சிகளும் விவசாய அமைப்புகளும் கண்டித்து வருகின்றன. 

 

Hydro carbon project cancels environmental clearance -manitha neya makkal Party Condemned

 

இது குறித்து கண்டன அறிக்கை வெளியுட்டுள்ள மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, ‘’     மண்ணை மலடாக்கி விவசாய பூமியை நிர்மூலமாக்கும் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கான அனுமதியை எளிமையாக்க மத்திய அரசு முடிவெடுத்து தற்போது ஹைட்ரோகார்பன் போன்ற நாசகார திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதியும், பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தவும் தேவையில்லை என அறிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. காவிரி பாசனப் பகுதிக்கு பெரும் பேரழிவை உண்டாக்கும்.

 

Hydro carbon project cancels environmental clearance -manitha neya makkal Party Condemned


ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதியும், மக்களிடம் கருத்தும் தேவையற்றது என்கிற  மத்திய அரசின் முடிவு,  பெரும் முதலாளிகளுக்குச் சிவப்புக் கம்பளம் விரித்து நாட்டின் பசுமையைப் பாழாக்கும் செயலாகும். அனைத்துத் துறையிலும் மக்களுக்கு விரோதமான திட்டங்களைக் கொண்டு வரும் மத்திய பாஜக அரசு, தமிழகத்திலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி அளித்து வருவதை ஆளும் அதிமுக அரசு அமைதியாக வேடிக்கைப் பார்த்து வருகிறது.  ஹைட்ரோகார்பன் திட்டத்தைத் தமிழகத்தில் அனுமதிக்கமாட்டோம் என்று சட்டமன்றத்தில் வாக்களித்த அதிமுக அரசு , அது தொடர்பாக எவ்விதமான அடுத்தகட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாதது கண்டனத்திற்குரியது.

எனவே, காவிரிப் பசன பகுதிகளைப் பெரிதும் பாதிக்கும் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்குத் தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுத்து மத்திய அரசிற்கு அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும் எனவும், காவிரி பாசன பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்திருக்கும் மத்திய அரசின் செயல் மிகவும் கண்டனத்திற்குரியது ‘’ என சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ஹைட்ரோ கார்பன் எடுக்க தடை விதிக்க வேண்டும்’ - விவசாயிகள் கோரிக்கை!

Published on 17/12/2021 | Edited on 17/12/2021

 

‘Hydrocarbon extraction should be banned’ - Farmers demand

 

அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்படாது என மாவட்ட நிர்வாகமும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கரும் அண்மையில் உறுதியளித்திருந்த நிலையில், மீண்டும் மத்திய மாநில அரசுகளின் அனுமதி பெறப்பட்டுள்ளது என்று ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இது விவசாயிகள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

அரியலூர் மாவட்டம் என்பது டெல்டா பகுதிகளில் வருகிறது. மேலும், அங்கு ஹைட்ரோ கார்பன் திட்டம் அமைக்கப்பட்டால், புதுக்குடி குருவாலப்பர் கோயில் உள்ளிட்ட இடங்களில் வேளாண் நிலங்களும் அருகில் கங்கை கொண்ட சோழபுரம் உள்ளிட்ட புராதன சின்னங்களும், கங்கை கொண்ட சோழபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த இராசேந்திர சோழனின் பெரும் முயற்சியால் உருவாக்கப்பட்ட சோழகங்கம் எனும் பொன்னேரி உட்பட பல்வேறு நீர்நிலைகள் வரண்டுவிடும் நிலை ஏற்படும்.

 

புதுக்குடி கிராமங்களில் ஆயிரக்கணக்கான கிணறுகள் உள்ளன. அவற்றில் தண்ணீர், தேன் போன்ற அருமையான சுனை நீர் ஆகியவை உள்ளன. அத்தகைய தண்ணீரைப் பயன்படுத்தி விவசாயம் செய்துவருகின்றனர் விவசாயிகள். ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளித்தால், புதுக்குடி கிராமங்களில் நீரூற்றுகள் அழிக்கப்படும் நிலை உருவாகி, விவசாயிகள் விவசாயம் செய்வதை விடுத்து ஊரைக் காலி செய்யும் நிலை உருவாகும். எனவே தமிழ்நாடு அரசு தனது நிலைப்பாட்டினை அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் என அனைத்து விவசாயிகள் சார்பில் அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் அறிக்கை மூலமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

 

Next Story

“தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் பணிகள் நடைபெறவில்லை” - கனிமொழி எம்பிக்கு மத்திய அமைச்சர் பதில்!

Published on 03/08/2021 | Edited on 03/08/2021

 

"Hydrocarbon works are not taking place in Tamil Nadu" - Union Minister's reply to Kanimozhi MP

 

தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பாதுகாப்பு சட்டம் 2020 நிறைவேற்றப்பட்டிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் உறிஞ்சும் பணிகளுக்கான ஏலத்தை தமிழ்நாடு அரசின் வேண்டுகோளுக்கிணங்க ரத்து செய்ய ஒன்றிய அரசு பரிசீலிக்கிறதா? என்று மக்களவையில் திமுக மகளிரணிச் செயலாளரும், மக்களவை குழு துணைத் தலைவருமான கனிமொழி எம்.பி. எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை இணை அமைச்சர் ரமேஷ் தெலி, ஆகஸ்ட் 2ஆம் தேதி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

 

அந்தப் பதிலில், “இந்திய அரசாங்கம் 2021 ஜூன் 10ஆம் தேதி, கண்டுபிடிக்கப்பட்ட சிறிய அளவிலான நிலப்பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் பிரித்தெடுத்தல் பணிக்காக மூன்றாவது சுற்று ஏலத்தை அறிவித்தது. இந்தியா முழுவதும் 75 இடங்களில் 13,204 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கான 35 ஒப்பந்தங்களைக் கோரி இந்த ஏலம் அறிவிக்கப்பட்டது. இவற்றில் இரு பெட்ரோலிய  சுரங்க குத்தகையை உள்ளடக்கிய ஒரு ஒப்பந்தம்  தமிழ்நாட்டில் ராமநாதபுரம், புதுக்கோட்டை வடத்தெரு ஆகிய பகுதிகளில் போடப்பட்டிருக்கிறது. இந்த இரு பெட்ரோலிய சுரங்க குத்தகைகளும் 2007 மற்றும் 2012ஆம் ஆண்டுகளில் வழங்கப்பட்டது. எண்ணெய் வயல்கள் முறைப்படுத்துதல் விரிவாக்கல் சட்டம் 1948 , பெட்ரோலிய இயற்கை எரிவாயு விதிகள் 1959 ஆகியவற்றின் கீழ் இவை வழங்கப்பட்டன. இப்போது தமிழ்நாட்டில் எந்த ஹைட்ரோ கார்பன் பிரித்தெடுத்தல் பணியும் நடைபெறவில்லை” என்று குறிப்பிட்டிருக்கிறார் அமைச்சர் ரமேஷ் தெலி.