Skip to main content

கால்சென்டரில் பணிபுரிந்த மனைவிக்கு சரமாரி வெட்டு... போலீசில் சரணடைந்த கணவர்!

Published on 27/10/2020 | Edited on 27/10/2020

 

The husband who surrendered after wife who worked in a call center!

 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியில், குமார் என்பவர் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து 5 பேரை வைத்து கால் சென்டர் எனும் தொலைபேசி அழைப்பு வணிகம் நடத்தி வருகிறார். இதில், வளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மஞ்சுரேகா என்ற பெண் கடந்த 3 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகிறார். இவர் காட்பாடி அடுத்த விருப்பாச்சிபுரம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட சண்டையால் கடந்த 4 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள்.
 

இந்நிலையில், மஞ்சுரேகா தாய் வீட்டில் தனது 2 குழந்தைகளுடன் தங்கியுள்ளார். தாய் வீட்டில் இருந்தபடியே, வேலைக்குச் சென்று வந்துள்ளார். மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு, தினேஷ் பலமுறை அழைத்ததாகவும், மஞ்சுரேகா வரமறுத்ததாகவும் கூறப்படுகிறது.

 

இந்நிலையில், அவர் பணிபுரிந்து வரும் மாதனூரில் உள்ள கால் சென்டருக்குச் சென்று மறைத்து வைத்திருந்த அரிவாளால் தனது மனைவி மஞ்சுரேகாவை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் தலை, கை, கால்கள் மற்றும் பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்த வெள்ளத்தில் துடி துடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு ஓடிப்போயுள்ளார். மஞ்சுரேகாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 

இந்நிலையில், மனைவியை வெட்டிய கணவர் தினேஷ், பாகாயம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். மனைவி மீதுள்ள சந்தேகத்தில் தினேஷ் வெட்டியுள்ளார் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து கொலை முயற்சி உட்பட பல்வேறு பிரிவுகளில் கீழ், கணவர் தினேஷ் மீது வழக்குப் பதிவு செய்து, சிறையில் அடைத்துள்ளது காவல்துறை.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஐ.டி. ரெய்டில் ரூ. 40 லட்சம் பறிமுதல்; திருப்பத்தூரில் பரபரப்பு!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
IT Raid Rs. 40 lakh forfeited; Busy in Tiruppathur

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

அதே சமயம் திருப்பத்தூர் மாவட்டம் திருநாதர் முதலியார் என்ற பகுதியைச் சேர்ந்த நவீன் என்பவர் போட்டோ ஸ்டுடியோ, ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவர் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி. ரமேஷின் அக்காள் மருமகன் ஆவார். இத்தகைய சூழலில் தேர்தலில் வாக்களிக்க வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வது குறித்து வருமான வரித்துறையினருக்கு தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நவீன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார். அப்போது ரூ. 40 லட்சம் ரொக்கம் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் தேர்தலில் வாக்களிக்க வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததா என்ற கோணத்திலும் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  வருமான வரித்துறை சோத்னையின் மூலம்  ரூ. 40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் திருப்பத்தூர் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மாற்றுத்திறனாளி சிறுவனை தனியார் பேருந்தில் ஏற்ற மறுத்த நடத்துநர்!

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
conductor refused to board the differently-abled son in the private bus

திருப்பத்தூர் மாவட்டம், விசமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் குப்தா. இவருடைய மனைவி வெண்ணிலா. இவர்களுக்கு 14 வயதில் மாற்றுத்திறனாளி மகன் உள்ளார். இவரை இன்று இவருடைய அம்மா வெண்ணிலா திருப்பத்தூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மீண்டும் விசமங்கலத்தில் உள்ள வீட்டிற்குச் செல்வதற்காக திருவண்ணாமலை செல்லும் தனியார் பேருந்தில் மாற்றுத்திறனாளியான மகனை ஏற்றி சீட்டில் உட்கார வைத்துள்ளார். அப்போது மாற்றுத்திறனாளி மகனைத் தனியார் பேருந்தின் நடத்துநர் கீழே இறக்கி விட்டுள்ளார். 

ஆத்திரம் அடைந்த அவரின் தாயார் வெண்ணிலா மற்றொரு பேருந்தில் விசமங்கலம் பகுதிக்கு வந்து சாலையில் கல்லை வைத்து கையில் பெட்ரோல் கேனுடன் திருப்பத்தூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டார்.

conductor refused to board the differently-abled son in the private bus

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பத்தூர் கிராமிய போலீசார், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய ஆய்வாளர் ரேகா மதி நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதால் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.