/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/04_83.jpg)
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த காவலூர், வீரராகவவலசை பகுதியைச்சேர்ந்தவர் விஜயகுமார். ஓட்டுனரான இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சுபாஷினி என்ற பெண்ணுக்கும் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் ஆன நிலையில் தற்போது சுபாஷினி 4 மாத கர்ப்பிணியாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் வழக்கம்போல் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் சுபாஷினி கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுவந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று இருவீட்டுப்பெற்றோரும் காவல் நிலையத்தில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். வீட்டுக்கு வந்த ஒரு மணி நேரத்திலேயே மது போதையில் வீட்டிற்கு வந்த கணவன் விஜயகுமார் மனைவியிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுபாஷினியின் வயிறு கழுத்து கை என நான்கு இடங்களில் குத்தியதில் படுகாயமடைந்தார்.
அவரின் அலறலைக்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து ரத்தவெள்ளத்தில் இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த காவலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு மது போதையில் இருந்த கணவன் விஜயகுமாரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)