/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_4611.jpg)
கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு பாலசுப்பிரமணி (வயது 43) என்ற நெசவுத் தொழிலாளி மாயமானதாக அவரது மனைவி ஹரிணி(38 பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் பாதிரிவேடு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த பாதிரிவேடு போலீசார் உறவினர்களின் உதவியுடன் மாயமான நெசவுத் தொழிலாளி பாலசுப்பிரமணியைத் தேடி வந்த நிலையில், அவரது ஹெல்மெட் மற்றும் உடைமைகள் வீட்டின் அருகே உள்ள சின்னெரி குளம் ஏரி அருகே இருப்பதாக தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து ஏரியை சுற்றி போலீசார் தேடியபோது ஏரியின் பின்புற கரையை ஒட்டி பள்ளம் தோண்டப்பட்ட தடயம் இருப்பதை போலீஸார் கண்டனர். உடனடியாக வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, அவர்கள் முன்னிலையில் போலீஸார் அந்த இடத்தில் பள்ளம் தோண்டினர். அப்போது பாலசுப்பிரமணி ரத்த வெள்ளத்தில் கைகள் உடைக்கப்பட்டு தலை, வயிறு உள்ளிட்ட பகுதிகளில் வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2_1782.jpg)
பிறகு கைப்பற்றப்பட்ட பாலசுப்பிரமணியத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காணாமல் போனதாக பதிவு செய்த வழக்கை கொலை வழக்காக போலீஸார் பதிவு செய்து விசாரணையைத்துவங்கினர்.கொலை செய்யப்பட்ட சுப்பிரமணியின் மனைவி ஹரிணிமீது சந்தேகம் அடைந்து விசாரணையில் ஈடுபட்டனர்.
அப்போது ஹரிணி, யாரிடமும் பேசுவதற்கு கூட எனக்கு செல்போன் இல்லை. என் மீது சந்தேகப்பட வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார். ஒரு கட்டத்தில் போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் ஹரிணியிடம் செல்போன் இருப்பது உறுதியானது. இதைத் தொடர்ந்து ஹரிணியின் செல்போன் அழைப்புகளைக் கொண்டு விசாரணையில் இறங்கிய போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த ஹரிணியின் ஆண் நண்பரான முத்து ஜெயம் (45) என்பவரை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், நானும் ஹரிணியும் தனிமையில் இருப்பதற்கு அவரது கணவர் பாலசுப்பிரமணியம் தடையாக இருந்தார். அதனால், கூலிப்படை வைத்து இரவோடு இரவாக அவரை கொலை செய்து ஏரி கரையில் புதைத்துவிட்டோம் என தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-3_672.jpg)
முத்துஜெயத்தின் வாக்குமூலத்தை அடுத்து கொலைக்கு காரணமான பாலசுப்பிரமணியின் மனைவி ஹரிணி, ஆவரது ஆண் நண்பரான முத்து ஜெயம் மற்றும் சம்பவத்தில் ஈடுபட்ட பாதிரி வேட்டையைச்சேர்ந்த ஹேமநாத் (22), இன்பராஜ் (22), என்.எஸ் நகரைச் சார்ந்த சுரேந்தர் (22) உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாகியுள்ள கூலிப்படை தலைவனான பாதிரிவேட்டையைச் சேர்ந்த கெத்து பிரபு என்கிற பிரபு (30), சூர்யா (26) மாநல்லூரைச் சேர்ந்த அஜய் (23) பாலாஜி (23) ஆகியோரை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)