Skip to main content

 “மாமா எங்கே..” - தம்பியின் கேள்வியால் சிக்கிய கொலையாளி அக்கா

Published on 30/05/2022 | Edited on 30/05/2022

 

Husband passes away police arrested his wife and boyfriend

 

கடலூர் மாவட்டம், நடுவீரப்பட்டு அருகேயுள்ள எஸ்.புதுக்குப்பம் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் ராஜசேகர்(46), கூலித் தொழிலாளி. இவரது மனைவி ஜோதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது 40). இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். ராஜசேகர் அடிக்கடி வெளியூர் சென்று வேலை செய்து வருவது வழக்கம். இந்த நிலையில், ராஜசேகர் வெளியூர் சென்றிருக்கும் போது ஜோதிக்கு அதே பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவருடன் திருமணத்தை மீறிய தொடர்பு ஏற்பட்டுள்ளது. 

 

ராஜசேகர் இல்லாதபோது ஜோதியும் மோகனும் தனிமையில் இருந்து வந்துள்ளனர். ராஜசேகருக்கு நாளடைவில் இவர்களின் பழக்கம் தெரியவந்தது. அதையடுத்து ராஜசேகர் பலமுறை ஜோதியைக் கண்டித்துள்ளார். ஆனால், ஜோதி அதனை பொருட்படுத்தாமல் மோகனுடன் தனது உறவைத் தொடர்ந்துள்ளார். ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த ராஜசேகர், 'மீண்டும் இதுபோன்று நடந்து கொண்டால் உனது வீட்டிலுள்ளவர்களிடம் சொல்லிவிடுவேன். இனி திருந்தி நடந்து கொள்ளாவிட்டால் உன்னைக் கொன்று விடுவேன்' என்று கண்டித்துள்ளார். அதனையடுத்து இவர்கள் உறவுக்கு இடையூறாக இருந்த ராஜசேகரை 9 மாதத்திற்கு முன்பு ராஜசேகரன் மனைவி ஜோதி, மோகனுடன் சேர்ந்து அடித்துக் கொலை செய்து வீட்டின் அருகில் இருந்த மீன் குட்டையின் ஓரத்தில் பள்ளம் தோண்டி யாருக்கும் தெரியாமல் புதைத்துள்ளனர். அந்த இடத்தையும் யாருக்கும் தெரியாதது போல் சரி செய்துவிட்டுச் சென்றுள்ளனர்.

 

குழந்தைகள், 'அப்பா எங்கே?' என்று கேட்கும் போதெல்லாம் ஜோதி அவர் வெளியூருக்கு வேலைக்குச் சென்றுள்ளதாகக் கூறி வந்துள்ளார். இதேபோல் ஜோதியின் தம்பி சிவக்குமாரும், 'அக்கா, மாமா எப்போ வருவார்? எந்த ஊருக்கு வேலைக்குச் சென்றுள்ளார்? அவரது போன் நம்பரை கொடு. நான் பேசுகிறேன்'  என அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளார். 

 

நேற்று முன்தினமும் இதேபோல் விடாப்பிடியாக கேட்டுள்ளார். ஒருகட்டத்தில் கடுப்பான ஜோதி, 'உனக்கு இனி மாமா மோகன்தான்' எனக் கோபமாகக் கூறினார். 'ஏன் இப்படி கூறுகிறாய்?, அப்போ எனது மாமா எங்கே, என்ன ஆனார் எனக் கேட்டுள்ளார். அதற்கு ஜோதி, 'உனது மாமாவை அடித்துக் கொலை செய்து மீன்குட்டை அருகே புதைத்து விட்டோம்' எனக் கூறியுள்ளார்.

 

இதனால் அதிர்ச்சியடைந்த சிவகுமார் இதுகுறித்து ராஜசேகரின் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராஜசேகரன் உறவினர்கள் நடுவீரப்பட்டு காவல் நிலையத்தில் புகார் செய்தனர். காவல் துறையினர் ஜோதியைப் பிடித்து விசாரணை செய்தனர். தீவிர விசாரணையில் ராஜசேகரை தானும் மோகனும் சேர்ந்து அடித்துக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து ஜோதியை போலீசார் கைது செய்து,  விசாரணை செய்து வருகின்றனர். மேலும், தலைமறைவான மோகனை தேடி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஜாஃபர் சாதிக் வழக்கு; துணை நடிகருக்கு இ.டி சம்மன்   

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
N

டெல்லியில் போதைப் பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி 50 கிலோ ரசாயன வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருட்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும் இதன் மொத்த மதிப்பு ரூ.2 ஆயிரம் கோடி எனவும் தெரிய வந்தது.

தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்தப் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டது திரைப்படத் தயாரிப்பாளரும் தி.மு.கவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்த ஜாஃபர் சாதிக்தான் என்பது தெரியவந்தது. மேலும் கடத்தல் கும்பலுக்கு தலைவனாக ஜாஃபர் சாதிக் செயல்பட்டதும் உறுதியாகி கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த ஜாஃபர் சாதிக்கை சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் கைது செய்து மூன்று நாட்கள் காவல் கஸ்டடியில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர். தொடர்ந்து ஜாஃபர் சாதிக்கின் பினாமி என்று கூறப்பட்ட ஆவடியைச் சேர்ந்த ஒருவர் வீட்டில் எட்டு மணி நேரமாக சோதனை நடைபெற்றது. இந்நிலையில் ஜாஃபர் சாதிக்கின் சகோதரரும், துணை நடிகருமான மைதீன் என்பவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

ஜாஃபர் சாதிக் தயாரித்து அமீர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'இறைவன் மிகப்பெரியவன்' படத்தில் மைதீன் துணை நடிகராக பணியாற்றியுள்ளது தெரிய வந்துள்ளது. நேற்று ஜாஃபர் சாதிக்கின் மனைவியிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் இன்று ஜாஃபர் சாதிக்கின் சகோதரருக்கு சம்மன் அனுப்பியுள்ளது அமலாக்கத்துறை.

Next Story

தட்டி தூக்கும் போலீசார்; துப்பாக்கி முனையில் ரவுடி கைது

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
knock-down police; The rowdy was arrested at gunpoint

தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் ரவுடிகளை கைது செய்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்த 11 பேரில் திருவேங்கடம் என்ற ரவுடி போலீசார் விசாரணையின் பொழுது தப்பிக்க முயன்றதோடு பதுக்கி வைத்திருந்த துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சுட முயன்றதால் என்கவுன்டர் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த என்கவுன்டர் ரவுடிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ரவுடிகள் சுட்டுப் பிடிக்கப்படுவதோடு, பயத்தில் சரணடைந்தும் வருகின்றனர். இந்நிலையில் சென்னை அருகே தலைமறைவாக இருந்த ரவுடியை துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் ஆறு மாதங்களாக ரவுடி சேதுபதி போலீசார் கண்ணிலிருந்து தப்பி தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில் சென்னை  புழல் அருகே சூரபட்டு பகுதியில் ரவுடி சேதுபதி தலைமறைவாக  இருப்பதாக தகவல் கிடைக்க, அங்குச் சென்ற போலீசார், துப்பாக்கி முனையில் சேதுபதியைக் கைது செய்துள்ளனர்.

ஐந்து கொலை வழக்குகளும், 30-க்கும் மேற்பட்ட கொலை முயற்சி உள்ளிட்ட குற்ற வழக்குகளும் நிலுவையில் உள்ள சரித்திர பதிவேடு குற்றவாளியான சேதுபதி கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கஞ்சா வழக்கில் சிக்கியிருந்த நிலையில் தலைமறைவாக இருந்தார். தற்பொழுது தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் ரவுடிகளை கைது செய்து வரும் நிலையில் துப்பாக்கி முனையில் ரவுடி சேதுபதியைப் போலீசார் கைது செய்துள்ளனர்.