Skip to main content

மனைவி இறந்த செய்தியைக் கேட்ட அடுத்த நொடியே உயிரிழந்த கணவன்!

Published on 25/01/2024 | Edited on 25/01/2024
 husband passed away the second he heard the news of his wife lost their life

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பூங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வயது முதிர்ந்த தம்பதியினர் ராஜா(65), ஜோதி(60). இவர்கள் விவசாயம் செய்து வந்துள்ளனர். இவர்களுக்கு  2 ஆண் மற்றும் ஒரு பெண் என 3 பிள்ளைகள் உள்ளனர். இவருடைய மனைவி ஜோதி கடந்த 2 ஆண்டுகளாக சிறுநீரகக் கோளாறு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த இந்நிலையில் நேற்று ஜோதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு வேலூர் அடுக்கம்பாரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இன்று அவர் சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்துள்ளார். இந்த செய்தியைக் கேட்ட அவரது கணவர் ராஜா அடுத்த நொடியே வீட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். 

ad

இந்த தகவல் அறிந்த கிராம மக்கள், அரசியல் பிரமுகர்கள் நேரில் சென்று இருவர் உடலுக்கும் அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். மிகவும் பாசமாக வாழ்ந்த வயது முதிர்ந்த தம்பதியினர் 2 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

பிறந்தநாள் சர்ப்ரைஸை கண்டுகொள்ளாத கணவன் கொலை; மனைவி கைது

Published on 09/07/2024 | Edited on 09/07/2024
Husband lose their live for not seeing birthday surprise; Wife arrested

கணவருக்காக தடபுடலாக பிறந்தநாள் ஏற்பாட்டை மனைவி மேற்கொண்ட நிலையில் அதனைக் கணவன் பாராட்டாததால் மனைவி கணவனை கொலை செய்த சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.

அமெரிக்காவில் வாழ்ந்து வரும் மிச்சல் ஓய் பீட்டர்ஸ் என்ற பெண் தன்னுடைய கணவனின் ஐம்பதாவது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளார். ஆனால் மனைவியின் பிறந்தநாள் ஏற்பாடுகளை கணவன் கண்டுகொள்ளவில்லை எனத் தெரிய வருகிறது. அதனைத் தொடர்ந்து பிறந்தநாள் அன்று பிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்த குளிர்பானம் ஒன்றை அருந்திய போது கணவருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மருத்துவமனையில் செய்த பரிசோதனையில் கணவனின் தொண்டை பகுதியில் புண் ஏற்பட்டது தெரியவந்தது. உடனடியாக வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவை சந்தேகத்தின் அடிப்படையில் கணவன் சோதனை செய்தபோது சோடாவில் பூச்சிக்கொல்லி மருந்தை மனைவி குளிர்பானத்தில் கலக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் மனைவி மிச்சல் ஓய் பீட்டர்ஸை போலீசார் விசாரித்துள்ளனர். அதில் பிறந்தநாள் கொண்டாட்ட ஏற்பாடுகளை கணவன் பாராட்டதால் ஆத்திரத்தில் குளிர்பானத்தில் விஷம் கலந்ததை மனைவி ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Next Story

ஓட்டுநரின் அலட்சியம்; புளியமரத்தில் மோதிய அரசு பேருந்து

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
Government bus accident near Tirupattur after hitting a tamarind tree

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து நாட்றம்பள்ளி நோக்கி அரசு பேருந்து 40 பயணிகளை ஏற்றிகொண்டு சென்றது. இந்தப் பேருந்தில் ஓட்டுனராக ஜீவா(48) என்பவரும் நடத்துநராக சௌந்தரராஜன்(50) என்பவரும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து பேருந்து கட்டேரி பகுதியில் சென்றபோது ஓட்டுநர் ஜீவா செல்போன் பேசிக்கொண்டு பேருந்து இயக்கி உள்ளார். அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதாமல் இருப்பதற்காக பேருந்தை திருப்பியபோது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள புளிய மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் திவ்யஸ்ரீ, முருகம்மாள், திவ்யா, மச்சராணி மற்றும் கர்ப்பிணி பெண் உள்ளிட்ட 13 பெண்களுக்கும் 4 ஆண்களுக்கும், இரண்டு வயது குழந்தை என மொத்தம் 18 பேருக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் காயமடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலமாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜோலார்பேட்டை போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.