Husband incident wife because she refuses to be single

கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டத்தில் வசிப்பவர்கள் ஷேக்கப்பா - நாகம்மா தம்பதியினர். ஷேக்கப்பா கூலித் தொழிலாளியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம்(28.9.2022)இரவு ஷேக்கப்பா தனது மனைவியை உடல் உறவுக்கு அழைத்துள்ளார். ஆனால் நாகம்மா அதற்கு மறுப்புத் தெரிவித்திருக்கிறார். ஆனால் விடாமல் ஷேக்கப்பா மீண்டும் மீண்டும் உடலுறவுக்கு அழைத்திருக்கிறார். இது தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

Advertisment

ஒரு கட்டத்தில் தகராறு முற்ற ஆத்திரமடைந்த ஷேக்கப்பா மனைவி நாகம்மாவை வீட்டில் இருந்த கோடாரியால் வெட்டியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த நாகம்மா சம்பவ இடத்திலேயே துடிக்கத் துடிக்க உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து நேற்று அதிகாலை சேடம் காவல் நிலையத்திற்கு சென்ற ஷேக்கப்பா தனது மனைவியை உடலுறவுக்கு அழைத்தேன்; அவர் மறுப்பு தெரிவித்ததால் கொலை செய்தேன் என்று கூறி சரண் அடைந்துள்ளார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் நாகம்மாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஷேக்கப்பாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.