Skip to main content

மக்கள் தரிசிப்பதால் தீட்சிதர்கள் உரிமை எப்படி பாதிக்கப்படும்? - உயர்நீதிமன்றம் கேள்வி

Published on 14/07/2023 | Edited on 14/07/2023

 

How will the rights of Dikshitars be affected by people darshanam High Court question

 

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பக்தர்கள் கனகசபையில் ஏறி வழிபடத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தீட்சிதர்கள், பக்தர்கள் கனகசபையில் ஏறி வழிபடத் தடை விதித்து பதாகை வைத்திருந்தனர். பின்பு போலீஸ் பாதுகாப்புடன் பதாகை அகற்றப்பட்ட பின்பு பக்தர்கள் கனகசபையில் ஏறி வழிபடத் தீட்சிதர்கள் அனுமதி மறுத்து வந்தனர்.

 

இதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள், கனகசபையின் மற்றொரு வழியாக ஏறி வழிபட முயன்றனர். ஆனால், தீட்சிதர்கள் அவர்களை ஏறவிடாமல் தடுத்து கீழே தள்ளிவிட்டனர். இதனையடுத்து தீட்சிதர்கள் அனைவரும் கனகசபையைப் பூட்டிவிட்டு கீழே வந்து காவல்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்தனர். இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் கோவில் நகையைத் திருட வந்தார்கள் எனக் கூறி தீட்சிதர்கள் கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தி கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தினார்கள். 

 

இந்த நிலையில் கனகசபையில் பக்தர்கள் ஏறி சாமியைத் தரிசிக்கலாம் என்று தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த டி.ஆர். ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். மேலும் கோவிலில் பூஜை, அபிஷேகம் உள்ளிட்டவை நடைபெறுவதால், கனகசபைக்கு பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தால் கோவில் கால வழிபாட்டில் இடையூறுகள் ஏற்படும் என்றும், இதன் மூலம் தீட்சிதர்களின் உரிமை பாதிக்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டிருந்தார். 

 

இந்த வழக்கு இன்று நீதிபதி ஆதி கேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், இந்த வழக்கில் உங்களுக்கு என்ன பாதிப்பு? வழக்கு தொடர நீங்கள் யார்? நீங்கள் என்ன தீட்சிதர்களா? கனகசபை மீது ஏறி மக்கள் தரிசித்தால் தீட்சிதர்கள் உரிமை எப்படி பாதிக்கப்படும்? அப்படி அவர்கள் உரிமை பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் ஏன் உச்சநீதிமன்றத்தை நாடவில்லை? தீட்சிதர்களின் உரிமை பாதிக்கப்படுவதாக 3வது நபர் எப்படி வழக்குத் தொடர முடியும் என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 11 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’- இ.பி.எஸ் கூறிய காரணத்தை நீதிபதிகள் ஏற்க மறுப்பு

Published on 08/12/2023 | Edited on 08/12/2023
Judges refused to accept the reasons given by edappadi Palaniswami in the Kodanad case

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்துள்ள கொடநாடு பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களாவில் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றிருந்தது. இதில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 11 பேர் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதில் கார் ஓட்டுநர் கனகராஜ் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி வாகன விபத்தில் உயிரிழந்தார்.

அதனைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி கொடநாடு பங்களாவில் சிசிடிவி ஆபரேட்டராகப் பணியாற்றி வந்த தினேஷ் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி முதல் இந்த வழக்கு சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. 

இதனிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு டெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் தன்னை தொடர்புபடுத்தி தவறாக வீடியோ வெளியிட்டதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும் அந்த வழக்கில் ரூ. 1.10 கோடி மான நஷ்ட ஈடாக வழங்கவேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக மாஸ்டர் நீதிமன்றத்திற்குச் சென்னை உயர்நீதிமன்றம் அனுப்பி வைத்தது. ஆனால் தன்னால் நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிப்பதிலிருந்து விலக்களிக்கவேண்டும் என்றும், அத்தோடு, தனது வீட்டிலேயே வந்து வழக்கறிஞர் ஆணையர் ஒருவர் வந்து சாட்சியங்களைப் பதிவு செய்துகொள்ளுமாறு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த தனிநீதிபதி, எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று அவரது வீட்டிற்குச் சென்று சாட்சியங்களைப் பெற வழக்கறிஞர் ஆணையராக எம்.கார்த்திகேய பாலனை நியமித்து உத்தரவிட்டார். 

இந்த நிலையில் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து பத்திரிகையாளர் மேத்யூ தாமஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு இன்று நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷஃவிக் முன்பு விசாரணைக்கு வந்தபோது, எதனடிப்படையில் நீங்கள் ஆஜராவதிலிருந்து விலக்கு கேட்கிறீர்கள் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர், காலில் ஏற்பட்ட காயம் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு கோருவது என்று கூறினர். உடல்நிலை காரணங்களைத் தவிர வேறு எதுவும் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை என்று கூறிய நீதிபதிகள் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து தங்களது தரப்பு வாதங்களை எடுத்துக்கூற வேண்டும் என்று எடப்பாடி தரப்பு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து வழக்கை டிசம்பர் 15 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story

என்.எல்.சிக்காக நடராஜர் கோவிலில் ருத்ராபிஷேகமா? ஆர்.எஸ்.எஸ் விளக்கம்

Published on 23/11/2023 | Edited on 23/11/2023

 

Rudrabhishekam at Nataraja temple: RSS organization denies

 

கடலூர் மாவட்டம் நெய்வேலி ராமகிருஷ்ண சேவா சங்கம் சார்பில் கடந்த நவம்பர் 19 ஆம் தேதி ஞாயிறு அன்று சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஏற்பாடு செய்து நடத்திய மஹா ஜப ருத்ராபிஷேக பூஜை குறித்து  சமூக வலைத்தளங்களில் தவறான குற்றச்சாட்டுகளை வெளியிட்டுள்ளதற்கு மறுத்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

 

நெய்வேலி ராமகிருஷ்ணா சேவா சங்கத் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,' கடந்த இரண்டு நாட்களாக குறிப்பிட்ட சில தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில், என்எல்சி இந்தியா நிறுவனம் (NLCIL) 19.11.2023 அன்று சிதம்பரத்தில் உள்ள நடராஜர் சன்னதியில் ருத்ர அபிஷேக பூஜைக்கு ஏற்பாடு செய்ததாக தவறாகப் பரப்பப்பட்டு வருகிறது. நெய்வேலி ராமகிருஷ்ண சேவா சங்கம் சார்பில் மஹா ஜப ருத்ராபிஷேக பூஜை சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஏற்பாடு செய்தது. இந்த பிரத்தியேகமான பூஜையானது, என்.எல்.சி இந்தியா லிமிடெட் மற்றும் பாரத தேசத்தின் ஒட்டு மொத்த நலன் மற்றும் வளர்ச்சிக்காக நாங்கள் ஏற்பாடு செய்திருந்தோம். இந்த பூஜை, முழுக்க என்எல்சிஐஎல் மற்றும் தேசிய நலன் கருதியதாகவும் இருந்ததால், என்.எல்.சி.ஐ.எல் நிறுவனத்தின் தலைவர், இயக்குநர்கள், என்.எல்.சி.ஐ.எல்-ன் மற்ற மூத்த அதிகாரிகளுடன் பங்கேற்குமாறு எங்கள் சேவா சங்கம் கேட்டுக் கொண்டிருந்ததின் பேரில் பங்கேற்றனர்.

 

nn

 

பூஜைக்கான முழுச் செலவையும் நெய்வேலி ராமகிருஷ்ண சேவா சங்கத்தின் அமைப்பு மட்டுமே ஏற்றுக்கொண்டது என்று நெய்வேலி ராமகிருஷ்ண சேவா சங்கம் மேலும் தெளிவுபடுத்துகிறது. இது போன்ற செய்திகளை, அடிப்படை உண்மைகளை சரிபார்க்காமல் பரப்புவது பொறுப்பற்றது மற்றும் என்.எல்.சி.ஐஎல் மீது தவறான உள்நோக்கம் கொண்டதும் ஆகும். நெய்வேலி ராமகிருஷ்ணா சேவா சங்கம், கடந்த 18 ஆண்டுகளாக ஆன்மீக மற்றும் சமுதாயம் சார்ந்த சேவைகளில் திறம்பட செயலாற்றி வருகிறது. வருடாந்திர மருத்துவ முகாம்கள், இரத்த தானம் மற்றும் சமுதாய வளர்ச்சி சார்ந்த சேவைகளை மையமாக கொண்டு இயங்கி வருகிறது. அதன் அடிப்படையில், புதுச்சேரியில் உள்ள ராமகிருஷ்ணா மடத்தின் தலைவர் சுவாமி ஆத்மகனாநந்தர் மகராஜ் மற்றும் சுவாமி அசோக் மகராஜ் ஆகியோர் நல்லாசி மற்றும் முன்னிலையில் மஹா ஜப ருத்ர அபிஷேக பூஜை சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடைபெற்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.