Skip to main content

ஸ்பீக்கர் பாக்ஸுக்குள் சிறுவனின் உடல்; பதற வைக்கும் கொடூர சம்பவம்

Published on 21/09/2023 | Edited on 21/09/2023

 

The horrific incident that happened to the boy; Police investigation

 

இரண்டு வயது சிறுவன் கொலை செய்யப்பட்டு ஸ்பீக்கர் பாக்ஸுக்குள் சடலம் மறைத்து வைக்கப்பட்ட சம்பவம் கள்ளக்குறிச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்துள்ளது திருப்பாலபந்தல் கிராமம். அங்கு வசித்து வந்த குருமூர்த்தி - ஜெகதீஸ்வரி தம்பதிக்கு திருமூர்த்தி என்ற இரண்டு வயது மகன் இருந்தான். கடந்த 17 ஆம் தேதி வீட்டருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திருமூர்த்தி காணாமல் போனான். திருமூர்த்தியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுவனைப் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அதனைத் தொடர்ந்து அவர்கள் திருப்பாலபந்தல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

 

புகாரின் அடிப்படையில் போலீசார் சிறுவனைத் தேடி வந்தனர். இந்நிலையில் வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகம் எழுந்தது. சிறுவனின் தந்தை குருமூர்த்தி வீட்டில் இருந்த ஒவ்வொரு பொருட்களையும் கலைத்து தேட ஆரம்பித்தார். அப்பொழுது குருமூர்த்தியின் தம்பி ராஜேஷ் இருக்கும் அறைக்குள் இருந்து அதிகப்படியான துர்நாற்றம் வந்தது. உள்ளே சென்று தேட முயன்றபோது, பூனை அல்லது பெருச்சாளி  இறந்திருக்கலாம் என ராஜேஷ் சொல்லியுள்ளார். இதனால் தேடுவதை நிறுத்தியுள்ளனர். அதன் பிறகு ராஜேஷ் வெளியே சென்றுவிட்ட பின்னர் மீண்டும் அவர் அறைக்குள் சென்று சோதித்துள்ளனர். அப்பொழுது ஸ்பீக்கர் பாக்ஸ் ஒன்றின் உள்ளே இருந்து துர்நாற்றம் வருவது அறிந்து அதை உடைத்துப் பார்த்தபோது அதிர்ச்சி தரும் வகையில் சிறுவன் அதற்குள் உயிரிழந்த நிலையில் அடைத்து வைக்கப்பட்டுக் கிடந்தான்.

 

The horrific incident that happened to the boy; Police investigation

 

அழுகிய நிலையில் கிடந்த குழந்தையின் சடலத்தை மீட்ட பெற்றோர், கண்ணீர் விட்டு அழுதது அங்கிருந்தவர்களைப் பதற வைத்தது. தகவல் அறிந்து வீட்டுக்கு வந்த போலீசார், சிறுவனின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சந்தேகத்தில் ராஜேஷை பிடித்து போலீசார் விசாரித்தபொழுது, சொத்து தகராறு தொடர்பாக அண்ணனும், அண்ணியும் சண்டையிட்டு வந்ததால் அவரது மகனை கழுத்தை நெரித்துக் கொலை செய்து உடலை ஸ்பீக்கர் பாக்ஸ்க்குள் வைத்ததாக ராஜேஷ் ஒப்புதல் அளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குழந்தைக்கு நேர்ந்த இந்த கொடூர சம்பம் அந்த பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

பெண் விவசாயியை வெட்டிய வடமாநில இளைஞர்; வெளுத்து வாங்கிய கிராம மக்கள்

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

North State Youth attack Female Farmer; Bleached villagers

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மகாலட்சுமி. இவர், தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விவசாயம் பார்த்து வருகிறார். இந்த நிலையில், இவர் நேற்று வழக்கம்போல் தனது விவசாய நிலத்தில் விவசாயம் பார்த்து வந்தார். அப்போது, அங்கு வந்த வடமாநில இளைஞர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாள் மனையை கொண்டு திடீரென மகாலட்சுமியின் கையில் சரமாரியாக வெட்டியதாகக் கூறப்படுகிறது. 

 

இதனை தொடர்ந்து, மகாலட்சுமியின் அலறல் சத்தத்தை கேட்ட அந்த ஊர் பொதுமக்கள் அங்கு ஓடி வந்தனர். கிராம மக்கள் ஓடி வருவதை கண்ட அந்த வடமாநில இளைஞர் அங்கிருந்து தப்பிச்  சென்று அருகில் உள்ள ஒரு வீட்டின் மாடி பகுதியில் ஒளிந்துகொண்டார். இதனையடுத்து, அந்த ஊர் மக்கள் இளைஞரை பிடிப்பதற்காக அருகில் சென்ற போது அரிவாள்மனையால் தாக்க முயன்றார். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பிடிக்க முடியாமல் அந்த இளைஞரிடம், ஹிந்தி மொழி தெரிந்த அந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர், இளைஞர் அருகில் சென்று நைசாக பேச்சு கொடுத்து கூல்டிரிங்க்ஸ் கொடுத்து சமாதானப்படுத்தினார். மேலும், இளைஞர் தனது கையில் வைத்திருந்த ஆயுதத்தை சாதுர்யமாக வாங்கி அப்புறப்படுத்தினார்.

 

இதையடுத்து, அந்த ஊர் மக்கள் இளைஞரின் சட்டையை பிடித்து தரதரவென இழுத்து சரிமாரியாக தாக்கினர். இதில், அந்த இளைஞருக்கு ரத்த காயம் ஏற்பட்டதை அடுத்து ஆட்டோவில் ஏற்றி, அவரை அழைத்து சென்று காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து, பொதுமக்கள் தாக்கியதில் காயம் ஏற்பட்டதில் அந்த இளைஞருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விவசாயம் பார்த்து வந்த பெண்மணியை வடமாநில இளைஞர் ஒருவர் அரிவாள்மனையால் தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை புதரில் வீச்சு

Published on 19/11/2023 | Edited on 19/11/2023

 

A baby boy who was only a few hours old was thrown in the bush

 

கன்னியாகுமரியில் புதரில் பச்சிளம் குழந்தை வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

கன்னியாகுமரி மூஞ்சிறை அருகே மங்காடு செல்லும் பகுதியில் புதரில் இருந்து குழந்தையின் அழுகுரல் சத்தம் வருவதை அந்த வழியாக சென்ற மக்கள் கேட்டு அதிர்ந்தனர். அதனைத் தொடர்ந்து அங்கு சென்று புதர் பகுதியில் தேடிப் பார்த்த பொழுது உடலில் துணி சுற்றப்பட்ட நிலையில் ஆண் குழந்தை ஒன்று கிடந்தது.

 

உடனடியாக புதுக்கடை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குழந்தையை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு குழந்தையை எடுத்துச் சென்றனர். அந்த பகுதியில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை வைத்து குழந்தையை யார் வீசியது என்பது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தை புதரில் வீசப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்