highcourt mater movie case

'மாஸ்டர்' திரைப்படத்தை சட்டவிரோத இணையதளங்களில்வெளியிடத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆன்ட்ரியா, ஷாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தை சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார்.

Advertisment

இந்நிலையில், இந்தப் படத்தை தயாரித்துள்ள இணைத் தயாரிப்பாளர் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம், சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடத் தடை விதிக்கக் கோரி,சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

மனுதாரர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியம், ‘சட்டவிரோதமான இணையதளங்களில் மாஸ்டர் படத்தை வெளியிட்டால், தங்களுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும்.எனவே,இந்தப் படத்தை சட்டவிரோத இணையதளங்களில் வெளியிடக் கூடாது’ என வாதிட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், 400 சட்டவிரோத இணையதளங்களும், இணையதள சேவை வழங்கும் 29 நிறுவனங்களும், மாஸ்டர் திரைப்படத்தை, வெளியிடத் தடை விதித்து உத்தரவிட்டார்.

Advertisment