
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் ராணுவ உயர் அதிகாரிகளோடு சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் இதுவரை 7 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். கோவை மாவட்டம் சூலூரிலிருந்து வெலிங்டன் நோக்கி சென்றபோது இந்த கோர விபத்து நடந்துள்ளது. இந்த விமானத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்கள் பயணித்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்த தகவல் வெளியானதும் மத்திய அமைச்சர்களோடு பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். விபத்து நடந்து இடத்திற்கு ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்னும் சில மணி நேரங்களில் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மோசமான வானிலையையும் புறக்கணித்துவிட்டு மிக சாமர்த்தியமாகப் பறக்கக்கூடிய எம்ஐ17 வி5 ஹெலிகாப்டர் எப்படி விபத்தில் சிக்கியது என்று அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விபத்து நடந்த இடத்திற்குத் தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு சென்றுள்ளார். மீட்பு பணிகளைத் துரிதப்படுத்த தமிழ்நாடு அரசு மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக மு.க. ஸ்டாலின் அவசர ஆலோசனையில் ஈடுபட்ட நிலையில், மாலை 5 மணி அளவில் அவர் கோவை செல்கிறார். அங்கிருந்து விபத்து நடத்த இடத்திற்கு அவர் செல்வதற்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)