கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று தமிழகத்தின் பல இடங்களில் காற்றுடன் மழை பொழிந்தது.
இந்நிலையில் இன்றுதமிழகத்தில்9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை, நீலகிரி, தேனி,திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரியில்கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும்,வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் வெப்ப சலனத்தால் தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும்சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.அதேபோல் நேற்று பொழிந்தகனமழையால், இடி தாக்கிதமிழகத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.