Skip to main content

சென்னையில் கனமழை; 3 விமானங்கள் ரத்து

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

nn

 

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

 

தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற உள்ள நிலையில் அதற்கு மிக்ஜம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த மிக்ஜம் புயல் டிசம்பர் 5 ஆம் தேதி முற்பகலில் நெல்லூருக்கும் - மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையைக் கடக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், புயல் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை கண்டு அச்சப்பட வேண்டாம் என பொதுமக்களுக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

 

இந்தப் புயல் எதிரொலி காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விடிய விடிய விட்டு கனமழை பொழிந்தது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு முழுவதும் மழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில்  மிக்ஜம் புயல் எதிரொலியாக சென்னையில் 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து மும்பை, ஹைதராபாத் செல்ல இருந்த இரண்டு விமானங்கள், மும்பையில் இருந்து சென்னை வர இருந்த ஒரு விமானம் என மூன்று விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில் இருந்து புறப்பட இருந்த ஒன்பது விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சென்னையில் ஆலோசனை

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
nn

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

இந்நிலையில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் இன்று ஆலோசனை நடத்துவதற்காக சென்னை வந்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆய்வு செய்ய இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜ்குமார் நேற்று சென்னை வந்தடைந்த நிலையில், இன்று ஆலோசனை நடைபெற இருக்கிறது. அவருடன் தேர்தல் ஆணையர்கள் மூன்று பேரும் சென்னை வந்துள்ளனர்.

முதற்கட்டமாக தமிழ்நாடு தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபியுடன் இன்று பிற்பகல் தலைமைத் தேர்தல் ஆணையர் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். இந்த ஆலோசனையில் தமிழ்நாடு மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

Next Story

ஐ.பி.எல். போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு! 

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
IPL Release of schedule for matches

உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். டி20 தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதன் 17 ஆவது சீசன் இந்த ஆண்டு (2024) மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடருக்கான முதற்கட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதாவது ஐ.பி.எல். தொடரின் முதல் 17 நாட்களுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி மார்ச் 22 ஆம் தேதி ஐ.பி.எல். தொடர் தொடங்கவுள்ளது. ஏப்ரல் 7 ஆம் தேதி வரை   21 போட்டிகள் முதற்கட்டமாக நடைபெறவுள்ளன.

அந்த வகையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 22 இல் நடைபெறும் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி, - பெங்களூரு அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. 9 வது முறையாக ஐ.பி.எல். சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்குகிறது. மேலும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் அட்டவணை வெளியான பிறகு 2 ஆம் கட்ட அட்டவணை வெளியாகும் எனக் கூறப்படுகிறது.