/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/02_67.jpg)
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக தீவிரமடைந்து வருகிறது. கடந்த நான்கு தினங்களாக தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் களத்தில் இறங்கி வேலை பார்த்து வருகிறார்கள். சென்னையில்மாலையில் மழையின் அளவு குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் கனமழை பெய்து வருகிறது. பாரிமுனை, கே.கே நகர், நுங்கம்பாக்கம், ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை தீவிரமடைந்துள்ளது. இதனால் மீண்டும் அப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)