ரகத

குரங்கு அம்மை நோய் தொடர்பாக விமான நிலையங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அவசர உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.

Advertisment

உலக நாடுகளைக் கடந்த சில மாதங்களாக அச்சுறுத்தி வரும் குரங்கு அம்மை நோய்த் தொற்றின் வரலாறு 60 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியுள்ளது. ஆப்பிரிக்காவில் காணப்படும் இந்த வைரஸ், முதன் முதலில் 1958 ஆம் ஆண்டு குரங்குகளிடம் கண்டறியப்பட்டது. மனிதருக்கு இந்த வைரஸ் பாதிப்பு முதல்முறையாக 1970 ஆம் ஆண்டு காங்கோ நாட்டில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் தொற்று 2017 ஆம் ஆண்டு முதல் நைஜீரியா, காங்கோ நாடுகளில் மீண்டும் பரவியது. தற்பொழுது அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் பரவி வருகிறது. பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி ஆகியவற்றில் கடந்த வெள்ளிக்கிழமை புதிதாக இந்தத் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை 15 நாடுகளில் 120க்கும் மேற்பட்ட நபர்களுக்குக் குரங்கு அம்மை பரவியுள்ளது.

Advertisment

இந்நிலையில் குரங்கு அம்மை பாதிப்புள்ள நாடுகளுக்குக் கடந்த 21 நாட்களில் சென்று வந்தவர்கள் தகவல் தர வேண்டும் என பொதுச் சுகாதாரத்துறை கடந்த வாரம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் இன்று அனைத்து விமான நிலையங்களுக்கும் புதிய உத்தரவு ஒன்றை பொதுச் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி " குரங்கு அம்மை பாதிப்பு என சந்தேகத்திற்கிடமானவர்களை தனிமைப்படுத்திட வேண்டும். குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் ஏதேனும் பயணிகளுக்கு இருப்பதாக சந்தேகம் இருந்தால் அவர்களின் ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் எடுத்து ஆய்வுக்கு அனுப்ப வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.