Headmistress arrested for making students clean toilets

பெருந்துறை அருகே மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள பாலக்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்ததாக கூறப்படுகிற நிலையில், அது குறித்து மாணவர்களிடம் விசாரித்த பொழுது பள்ளியின் தலைமை ஆசிரியை கீதாராணி தங்களை கழிவறையை சுத்தம் செய்ய பணித்ததாக மாணவர்கள் தெரிவித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல்ஆனது.

Advertisment

அதேபோல் சில மாணவர்களுக்கு ப்ளீச்சிங் பவுடரை கையில் தொட்டதால் கையில் கொப்புளங்கள் ஏற்பட்டது தொடர்பாகவும் படங்கள், வீடியோக்கள் வெளியாகியிருந்தது. இந்நிலையில், இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமை ஆசிரியை கீதாராணியை தேடி வந்த நிலையில், தலைமறைவாக இருந்த கீதாராணியை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் போலீசார் இந்த கைது நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.