
சிவகங்கை அருகே இளைஞர் ஒருவரை வெட்டிக்கொலை செய்து தலையை தூக்கிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இது தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள செங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் ராமு. நேற்று மாலை வெளியே சென்ற ராமு வீட்டுக்கு திரும்பவில்லை இதனால் அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் அருகிலுள்ள கண்மாயில் தலையில்லாத நிலையில் இளைஞரின் சடலம் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
அந்தத் தகவலின் அடிப்படையில் நிகழ்விடத்திற்குச் சென்ற காவல்துறையினர் விசாரணை செய்தனர். அது காணாமல் போன ராமுவின் உடலாக இருக்குமோ எனச் சந்தேகமடைந்த போலீசார் ராமுவின் உறவினர்களை அழைத்து வந்து உடலைக் காட்டி விசாரித்ததில் அது ராமுவின் உடல் என்பது உறுதி செய்யப்பட்டது. கைப்பற்றப்பட்ட ராமுவின் உடலை போலீசார் மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர். அவர் தலைப் பகுதியைக் காணாத நிலையில் கொலை செய்தவர்கள் எடுத்துச் சென்று இருக்கலாம் என சந்தேகித்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இது குறித்து விசாரிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் பெண் தகராறு காரணமாக இந்த கொலை நடைபெற்றது தெரியவந்துள்ளது. மேலும் உயிரிழந்த ராமுவின் தலையானது அதே கண்மாய் பகுதியில் முள் புதரிலிருந்து கண்டுபிடித்து மீட்கப்பட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)